Showing posts with label சமையல். Show all posts
Showing posts with label சமையல். Show all posts

Wednesday, July 22, 2015

வெயிலுக்கு குளுமை தரும் நெல்லிக்காய் மோர்



தேவையான பொருட்கள்
நெல்லிக்காய் – 5

மோர் – ஒரு கப்,

உப்பு, பெருங்காயம் – தேவையான அளவு

கொத்தமல்லி தழை - சிறிதளவு

செய்முறை:

• கொத்தமல்லி தழையை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

• நெல்லிக்காயின் கொட்டையை நீக்கிவிட்டு, பொடியாக நறுக்கி, உப்பு சேர்த்து மிக்ஸியில் நன்றாக அரைக்கவும்.

• அரைத்த விழுதை ஒரு பாத்திரத்தில் கொட்டி இதனுடன் கொத்தமல்லி, பெருங்காயம், மோர் சேர்த்துக் நன்றாக கலக்கி, குளிர வைத்து பருகலாம்.

குறிப்பு:

வைட்டமின் ‘சி’ நிறைந்த இந்த எனர்ஜி டிரிங், வயதானவர்களுக்கு மிகவும் ஏற்றது. கோடை வெயிலுக்கு இந்த பானம் உடலுக்கும் குளுமையையும், எனர்ஜியையும் கொடுக்கும்.

0

வெயிலுக்கு இதம் தரும் வாட்டர் மிலன் ஜின்ஜர் ஜூஸ்



தேவையான பொருட்கள் : தர்பூசணி - 2 கப் (விதை நீக்கியது)  இஞ்சி - சிறிய துண்டு  எலுமிச்சை பழம் - 1 

தண்ணீர் - 2 கப்
புதினா இலை - 6
ஐஸ் கியூப்ஸ் - சிறிதளவு

செய்முறை :

• எலுமிச்சை பழத்திலிருந்து சாறு எடுத்து வைக்கவும்

• இஞ்சை சிறு துண்டுகளாக வெட்டி அதை மிக்சியில் போட்டு அதனுடன் 2 புதினா இலைகள், சிறிது தண்ணீர் சேர்த்து நன்றாக அரைத்து வடிகட்டி கொள்ளவும்.

• மிக்சியில் தர்பூசணி, இஞ்சி தண்ணீர், ஐஸ் கியூப்ஸ், தண்ணீர் 2 கப் எலுமிச்சை சாறு சேர்த்து நன்றாக அரைக்கவும்..

• அரைத்த ஜூஸை கண்ணாடி டம்ளரில் ஊற்றி அதன் மேல் புதினா இலைகளை போட்டு பருகவும்.

• கோடை வெயிலுக்கு இதம் தரும் பானம் இது.
0

கடலைப்பருப்பு சுண்டல்



தேவையான பொருட்கள்:   கடலைப்பருப்பு - 200 கிராம்,  தேங்காய் துருவல் - 2 டீஸ்பூன், 

கடுகு - ஒரு டீஸ்பூன்,
காய்ந்த மிளகாய் - 2,
பெருங்காயத்தூள், கறிவேப்பிலை - சிறிதளவு,
எண்ணெய் - ஒரு டீஸ்பூன்,
உப்பு - தேவையான அளவு.

செய்முறை:

• கடலைப்பருப்பை நன்றாக கழுவி ஒரு மணி நேரம் ஊற வைக்கவும். பிறகு குக்கரில் வைத்து, ஒரு விசில் வந்ததும் இறக்கவும்.

• வாணலியில் எண்ணெய் விட்டு கடுகு தாளித்து, காய்ந்த மிளகாயை கிள்ளிப் போட்டு... வேக வைத்த கடலைப்பருப்பை தண்ணீர் வடித்து சேர்த்து, உப்பு, தேங்காய் துருவல், பெருங்காயத்தூள், கறிவேப்பிலை சேர்த்துக் கிளறி இறக்கவும்.

• சுவையான கடலைப்பருப்பு சுண்டல் ரெடி. குழந்தைகளுக்கும், பெரியோர்களுக்கு மிகவும் பிடித்தமான மாலை சிற்றுண்டி இது. 
0

துளசி ரசம்



புளி - எலுமிச்சை அளவு துளசி இலை - 15

பூண்டு - 3 பல்
சீரகம் - 1 தேக்கரண்டி
சோம்பு - 1/2 தேக்கரண்டி
மிளகு – 1 / 2 தேக்கரண்டி
காய்ந்த மிளகாய் – 1
மஞ்சள் தூள் - 1 /4 தேக்கரண்டி
தக்காளி – 1 /2
உப்பு - தேவையான அளவு
கடுகு - 1 /2 தேக்கரண்டி
கறிவேப்பிலை – சிறிது
பெருங்காயத்தூள் - 1 /4 தேக்கரண்டி
நல்லெண்ணெய் – 3 தேக்கரண்டி
செய்முறை :
• சீரகம், மிளகு, சோம்பு பூண்டு ஆகியவற்றை கொரகொரப்பாக அரைத்துக் கொள்ளவும்.
• தக்காளியை சுட்டு புளியுடன், தக்காளியும் சேர்த்து நன்றாக கரைத்துக் கொள்ளவும்
• கடாயில் எண்ணெய் ஊற்றி கடுகு, கறிவேப்பிலை, பெருங்காயத்தூள் தாளித்த பின் புளி கரைசலை சேர்த்து மஞ்சப்பொடி, மிளகு தூள் சேர்க்கவும்.
• பின் வரமிளகாய் சுட்டு அதை ரசத்தில் போடவும். அதன் மேல் நறுக்கிய துளசி இலையை போட்டு கொதிக்கவிடவும்
• கொதிக்க ஆரம்பித்த உடனே இறக்கவும்.
• இது சளிக்கு மிகவும் நல்ல மருந்து. ஜூரத்தைக் குறைக்கும் குணம் கொண்டது. வயிற்றுப் புண், வாய்ப்புண்களை குணப்படுத்தும்.

0

பீட்ரூட் கீரை மசியல்


தேவையான பொருட்கள்: பீட்ரூட் கீரை - 4 செடிகளின் இலைகள்

சின்ன வெங்காயம் - 7
தக்காளி - பாதி
பச்சைமிளகாய் - 1
புளி - சிறு கோலி அளவு
பூண்டு பல் - 7
உப்பு - தேவைக்கு
தாளிக்க:
நல்லெண்ணெய்
கடுகு
உளுந்து
மிளகு - 2
சீரகம்
காய்ந்தமிளகாய் - 1
பெருங்காயம்
செய்முறை:
• முற்றிய, பூச்சி இலைகளை நீக்கிவிட்டு, மீதமுள்ள கீரையை நன்றாக நீரில் அலசித் தண்ணீரை வடியவைக்கவும்.
• ஒரு கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் விட்டு சூடானதும் வெங்காயம், பச்சைமிளகாய், பூண்டு, தக்காளி, புளி, கீரை இவற்றை அடுத்தடுத்து சேர்த்து வதக்கி ஆறியதும் மிக்ஸியில் போட்டு உப்பு சேர்த்து மசித்து எடுக்கவும். தண்ணீர் சேர்க்கத் தேவையில்லை.
• ஒரு கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் விட்டு சூடானதும் தாளிக்க வேண்டியவற்றைத் தாளித்து கீரை மசியலில் கொட்டவும்.
• இப்போது சுவையான, சிறிது பிங்க் நிறத்தினாலான பீட்ரூட் கீரை மசியல் தயார்.

0

சீந்தில் கொடி ஸ்பெஷல் டீ


தேவையான பொருட்கள்: சீந்தில் தண்டு – 50 கிராம்  மிளகு தூள் – ½ தேக்கரண்டி 

சீரகம் – 1 தேக்கரண்டி
பனங்கற்கண்டு – 1 தேக்கரண்டி
நீர் – 500 மி.லி.

செய்முறை:

• சீந்தில் கொடியை நன்கு நசுக்கி, நீரில் கொதிக்க வைத்து, அத்துடன் மிளகுதூள், சீரகம் கலந்து நன்றாக கொதிக்கவிட்டு இறக்கவேண்டும். அதனை வடிகட்டி, சுவைக்கு பனங்கற்கண்டு கலந்து பருகவேண்டும்.

* இந்த டீயை பருகினால், நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும், ஜீரணம் மேம்படும். மலச்சிக்கல் தீரும். இதை தினம் 100 மி.லி. பருகி வரலாம்.
0