Showing posts with label கவிதை. Show all posts
Showing posts with label கவிதை. Show all posts

Thursday, July 23, 2015

FACEBOOK க்கை பயன்படுத்திப்பார்.-வைர முத்து பாணியில் சிறப்பு கவிதை!


FACEBOOK க்கை பயன்படுத்திப்பார்...
உன்னை சுற்றி REQUEST தோன்றும்...
நட்பு அர்த்தப்படும்...
நாழிகையின் நீளம் குறையும்.... 
உனக்கும் கவிதை வரும்... 
டைப்பிங்க் வேகமாகும்... 
INTERNET தெய்வமாகும்...
உன் கைவிரல் பட்டே KEYBOADRS உடையும்... 
கண்ணிரண்டும் கமெண்ட் ஐ தேடும்... FACEBOOK க்கை பயன்படுத்திப்பார்..

நித்திரை மறப்பாய்...
6 முறை LOG IN பண்ணுவாய்...
LOG OUT பண்ணினால் நிமிடங்களை வருடங்கள் என்பாய்...
LOG IN பண்ணினால் வருடங்களை நிமிடங்கள் என்பாய்...
காக்கை கூட உன்னை கவனிக்கும்... 
ஆனால் யாருமே உன்னை கண்டுகொள்ளவில்லை என உணர்வாய்.
.. 
உனக்கும் நண்பருக்கும் இடையில் இனந்தெரியாத உறவொன்று உருவாகக் காண்பாய்
... இந்த போஸ்ட், இந்த கமெண்ட், இந்த லைக், எல்லாம் FACEBOOKஐ கௌரவிக்கும் ஏற்பாடுகள் என்பாய்..
FACEBOOK க்கை பயன்படுத்திப்பார்

... இருதயம் அடிக்கடி ஓய்வெடுக்கும்.
.. EMPTY POSTஇல் உனது கமெண்ட் மட்டும் இருக்கும்.
.. உன் நண்பனே உனக்கு கலாய்த்து கமெண்ட் அடிப்பான்..
. FACEBOOKஇன் பாஸ்வேட்டை நீயே மறப்பாய்

... அதற்காக மெயில் முகவரியை தேடுவாய்... பின் பாஸ்வேட்டை மாற்றுவாய்... FACEBOOK க்கை பயன்படுத்திப்பார்... நண்பர்களுடன் அரட்டை அடித்துக்கொண்டு இருக்க உன்னால் முடியுமா... சண்டையில் இம்சை அடைந்ததுண்டா... ஆளுகின்ற கொடுமை அடைந்ததுண்டா... உன்னையே உன்னால் மறக்க தெரியுமா... FACEBOOK க்கை பயன்படுத்திப்பார்...
சின்ன சின்ன கமெண்ட்களில் சிலிர்க்க முடியுமே அதற்காக வேணும்... நட்பை மீண்டும் உருவாக்க முடியுமே ஆதற்காக வேணும்... நட்பென்ற சொல்லுக்கு அகராதியில் இல்லாத அர்த்தங்கள் விளங்குமே அதற்காக வேணும்... FACEBOOKக்கை பயன்படுத்திப்பார்... அப்பன் அடித்தாலும்... ஆத்தா ஏசினாலும்... மனைவி புலம்பினாலும்.... விழித்துப்பார்க்கையில் நீ நடுரோட்டில் நின்றாலும்... நீ நேசிக்கும் முகநூல் உன்னை நேசிக்க மறந்தாலும்... வாழ்வு சாவு இரண்டில் ஒன்று இங்கேயே நிச்சயம்... FACEBOOK க்கை பயன்படுத்திப்பார்.
0

S.M.S.மொக்கை தத்துவங்கள்!



வாழ்க்கை என்பது பனமரம் போல ஏறினா நுங்கு! விழுந்தா சங்கு!



ஆண்கள் பொய் சொல்ல மாட்டார்கள்! பெண்கள் நிறைய கேள்வி கேட்காமல் இருந்தால்…

வெற்றியை தேடி அலைந்த போது “வீண் முயற்சி” என்றவர்கள். வெற்றி கிடைத்ததும் “விடா முயற்சி” என்றார்கள்.இதுதான் உலகம்.

நீ செய்யும் தவறு கூட புனிதம் ஆகும்.அதை நீ ஒப்பு கொள்ளும் போது…

ஆசை படுவதை மறந்து விடு!ஆனால் ஆசை பட்டதை மறந்து விடாதே!

தூசி பட்ட கண்களும், காதல் பட்ட இதயமும், எப்போதும் கலங்கி கொண்டே இருக்கும்…

ஒருவரை கூட காதலிக்காத பெண் இருக்கலாம் ,ஒருவரை மட்டும் காதலித்த பெண் இருக்கமுடியாது ......

சாலைய பார்த்தா சமத்து சேலைய பார்த்தா விபத்து.

குவார்ட்டர் அடிச்சுட்டு குப்புற படுக்கலாம் குப்புற படுத்துட்டு குவார்ட்டர் அடிக்க முடியாது.

ஒரு பெண்ணுக்கு புகுந்தவீடு பிறந்த வீடு என இரண்டு இருக்கும்போது ஏன் ஆணுக்கு சின்ன வீடு பெரிய வீடு இருக்க கூடாது.

தண்ணீர் மேல கப்பல் போனா உல்லாசம்.கப்பல் மேல தண்ணீர் போனா கைலாசம்.

ஆயிரம் தான் இருந்தாலும் ஆயிரத்து ஒண்ணுதான் பெருசு
காசு இருந்தா கால் டாக்சி!! காசு இல்லைன்னா கால் தான் டாக்சி!!!

டிக்கெட் வாங்கிட்டு உள்ள போனா அது சினிமாத் தியேட்டர்.உள்ளே போயிட்டு டிக்கெட் வாங்கினாஅது ஆபரேஷன் தியேட்டர்.

தினமும் காலண்டரைக் கிழிக்கிறதுபெரிய விஷயமில்லை;
ஒவ்வொரு நாளும் நாம் என்னத்தைக் கிழிச்சோம்கிறது தான் பெரிய விஷயம்....


குக்கர் விசிலடிச்சு பஸ்சு போகாது.கண்டக்டர் விசிலடிச்சு சோறு வேகாது?

என்ன தான் வாழை தார் போட்டாலும் அதை வைத்துக்கொண்டு ரோடு போட முடியுமா?

காக்கா என்னதான் கருப்பா இருந்தாலும் அது போடுற முட்டை வெள்ளைமுட்டை என்னதான் வெள்ளையா இருந்தாலும் அதுக்குள்ள இருந்து வர்ற காக்கா கருப்புதான்..



Files-ன்னா உக்காந்து பாக்கணும்.. Piles-ன்னா பாத்து உக்காரணும்..

பாம்பு எத்தனை தடவை படம் எடுத்தாலும் அதால ஒரு தடவை கூட Theatre-ல ரிலீஸ் பண்ண முடியாது …


1. கங்கை ஆத்துல மீன் பிடிக்கலாம்…. காவேரிஆத்துல மீன் பிடிக்கலாம் .. ஆனா ஐயர் ஆத்துல மீன் பிடிக்க முடியுமா



2. திருவள்ளுவர் 1330 குரல் எழுதிருந்தாலும் , அவரால ஒரு குரலில் தான் பேச முடியும்

3. “என்ன தான் தலை சுத்தினாலும் உன் முதுகை நீ பாக்க முடியுமா ?”

4. மீன் பிடிக்கிரவன மீனவன்-ன்னு சொல்லலாம்.நாய் பிடிக்கிரவன நாயாவன் – ன்னு சொல்ல முடியுமா?

5. தேள் கொட்டின வலிக்கும் .. பாம்பு கொட்டின வலிக்கும் . முடி கொட்டினா வலிக்குமா?

6. ஸ்கூல் டெஸ்ட்ல பிட் அடிக்கலாம் … காலேஜ் டெஸ்ட்ல பிட் அடிக்கலாம் … Blood டெஸ்ட்ல பிட் அடிக்க முடியுமா?

7. பொங்கலுக்கு Governmentla லீவு குடுப்பாங்க … ஆனா இட்லி தோசைக்கு லீவு குடுப்பாங்களா ?

8.கோல மாவில் கோலம் போடலாம். கடலை மாவில் கடலை போடமுடிமா?9. மகனே பரிட்சையில் எத்தனை கேள்வி வந்தது ?
ஐந்து கேள்விப்பா..
நீ எத்தனை கேள்வி விட்டுட்டே ?
முதல் மூணும் கடைசி இரண்டும்
வெரிகுட் கீபிடப்…



10. உங்க கிட்னி பெயில் ஆகிடுச்சு.
நான் என் கிட்னிய படிக்க வைக்கவே இல்லயே டாக்டர்
அது எப்படி பெயில் ஆகும் .



0

அது ஒரு அழகிய மொபைல் காலம்...!



* ஒரு வாரம் ஆனாலும் சார்ஜ் தீரும் என்கிற
கவலை இருந்ததே இல்லை!

* காவேரி ஆற்றில் மூழ்கி எடுத்தும் ,பொன்மலை ஸ்டேஷன் தண்டவாளத்தில் தவறி விழுந்தும்,உடைத்தே தீரவேண்டுமென சண்டை ஒன்றில் போட்டு உடைத்தும் கூட, கை குலுக்கியபடி சிரிக்கும் மொபைல் அது !

* கீ போர்டே தேய்ந்து போகும் அளவிற்கு மெசேஜ் அனுப்பிய மொபைல் அது !

* எழுந்து யாரையாவது அடிக்க தோன்றும் அளவுக்கு அலறும் அலாரம் அது !

* காலை தொடங்கி நைட் வரை எல்லாவற்றிற்கும் குரூப்
மெசேஜ் அனுப்பியே கொல்ல உதவிய மொபைல் அது !

*பந்து போல கூட பயன்படுத்தி இருக்கிறொம் ,
ஆனால் பந்தாவாக யாரும் அதைப் பயன்படுத்தியதில்லை

ஆன்ட்ராய்டுகளும் ஆப்பிள்களும் வந்தாலும் எங்களுக்கு அதுதான் அழகிய மொபைல் காலம் !!
0

"வெளிநாடு வந்துப்பார்"......இதுதான் மிஞ்சியது:-!(கவிதை!






பார்ப்பதற்குத்தான் ஆடம்பரம்.
ஆனாலும் இது ஒரு மாய வலை...
*
சந்தோஷம் என்று உள்ளேயும் இருக்க முடியாது.
வேண்டாம் என்று வெளியிலும் போக முடியாது.
*
நல்லது, கெட்டது, பிறப்பு, இறப்பு,
வரவு, செலவு இவையெல்லாம்,
ஒரு தொலைபேசி அழைப்பிலேயே அடங்கிவிடும்.
*
வலிக்கும்...
ஆனாலும் சொல்ல முடியாது.
அப்படியே சொன்னாலும், யாருக்கும் புரியாது.
யாரும் புரிந்து கொள்ளவும் மாட்டார்கள்.
*
அழுவோம்.....
ஆனாலும் யாருக்கும் தெரியாது.
ஏனென்றால்,
இங்கே பார்ப்பதற்கு யாரும் இருக்க மாட்டார்கள்.
*
வலியென்றால் தோளில் சாயவும்,
சந்தோசம் என்றால் அணைத்துக்கொள்ளவும்,
அன்யோன்யமானவர்கள் யாரும் இருக்கமாட்டார்கள்.
கண் எட்டும் தூரம் வரை,
தனிமை மட்டும் தான் மிஞ்சும்....
*
நன்றாக பசிக்கும்.
நிறைய சாப்பிடவும் செய்வோம்.
ஆனாலும் வயிறும், மனமும் நிறையாது....
ஏனென்றால், எங்காவது ஒரு மூலையில்
ஒரு வித ஏக்கம் இருந்து கொண்டே இருக்கும்.
*
நியாயமாக பார்த்தால்,
ஊரில் இருந்து தான் நமக்கு யாராவது
ஃபோன் பண்ணி விசாரிக்க வேண்டும்..
ஆனாலும், அப்படி யாரும்
கூப்பிட போவதில்லை என்றும் தெரியும்.
தெரிந்தும் யாராவது விசாரிக்கமாட்டார்களா..??
என்ற ஏக்கம் இருந்து கொண்டே இருக்கும்.
*
ஆனாலும், குடும்பத்துல் யாராவது ஒருத்தருக்கு
2 வாரம் ஃபோன் பண்ணாமல், பண்ணிபாருங்கள்.
நம்மிடம் கேட்பார்கள் பாருங்கள்.....
"என்னப்பா, வெளி நாடு போன உடனே
எங்களையெல்லாம் மறந்திட்ட போல" என்று........
அப்பொழுதும் இங்கிருந்து சிரித்துக்கொண்டே
பதில் சொல்ல வேண்டும்.....!!
*
"மனதின் காயங்களை மறைக்கிறேன்.
ஊராருக்கு ஆனந்தம் தரவே சிரிக்கிறேன்".

வெளிநாட்டில் வசிக்கும் ஒரு சகோதரனின் வலியை
எனக்கு உணர்த்திய இந்த வரிகள்...
0

பொறியியல்(B.E) படித்துப்பார்! (வைரமுத்து பாணியில் ஒரு கவிதை)





பொறியியல் படித்துப்பார்
உன்னைச் சுற்றி
நட்பு வட்டம் தோன்றும்
உலகம் விரியும் 
ராத்திரியின் நீளம் சுருங்கும்
உனக்கும் கதை எழுத வரும்
தலையெழுத்து ஊசலாடும்
External தெய்வமாவான்
Assignment எழுதியே 
கை உடையும்
கண்ணிரண்டும் பிதுங்கும்

பொறியியல் படித்துப்பார்

புத்தகமே தலையணையாக்குவாய்
பல முறை bulb வாங்குவாய்
Study leave வந்தால் 
வருஷங்கள் நிமிஷமென்பாய்
Semester வந்துவிட்டால் 
நிமிஷங்கள் வருஷமென்பாய்

Arrear வைத்துப்பார் 
ஆயம்மாகூட உன்னை கவனிக்கமாட்டார் - ஆனால்
கல்லூரியே உன்னையே கவனிப்பதாய் உணர்வாய்
Result அன்று
வயிற்றுக்கும் தொண்டைக்குமாய்
உருவமில்லா உருண்டையொன்று
உருளக் காண்பாய்
உன் அப்பா உன் HOD
அந்த staff இந்த princi 
எல்லாம் 
எமனின் ஏற்பாடுகள் என்பாய்

பொறியியல் படித்துப்பார்

இருப்பிடம் அடிக்கடி
இடம் மாறி இருக்கும்
நிசப்த அலைவரிசைகளில்
faculty குரல் மட்டும்
ஒலிபரப்பாகும்
உன் விதியே விளையாடி 
உனக்கெதிராய் அம்பு விடும்
Padips image- ஐ
groupstudy கிழிக்கும்
Syllabus 
நைல் நதியாய் பெருக்கெடுக்கும் 
மதிப்பெண்கள் மட்டும் 
சஹாராவாகும்
கனவுகள் சமுத்திரமாகும்
பின் outsourcingக்குள் 
கனவுகள் அடங்கும்

பொறியியல் படித்துப்பார்

Test எழுதி எழுதியே 
சோர்ந்துபோக 
உன்னால் முடியுமா?
Project guide-இன் 
இம்சையை அடைந்ததுண்டா?
Border line இல் passஆகிற சுகம் 
அறிந்ததுண்டா?
ஒரே நாளில் syllabus cover செய்ய தெரியுமா?
First bench ஐ தனிமையாக்கவும் 
Last bench ஐ சபையாக்கவும் 
உன்னால் முடியுமா?
Depression அடைய வேண்டுமா?
பல மாதம் சென்னையில் 
பணி தேடும் படலத்தில்
பட்டினி கிடந்து பழகியதுண்டா?




பொறியியல் படித்துப்பார்

சின்னச் சின்ன bitகளில் 
சிலிர்க்க முடியுமே
அதற்காகவேனும்
Page நிரப்பியே
pass ஆக முடியுமே 
அதற்காகவேனும்
Breakage என்ற சொல்லுக்கும்
Caution deposit என்ற சொல்லுக்கும்
அகராதியில் ஏறாத
அர்த்தங்கள் விளங்குமே
அதற்காகவேனும்
Arrear வைத்துக்கொண்டே 
படிக்கவும் முடியுமே 
படித்துக்கொண்டே 
Arrear எழுதவும் முடியுமே
அதற்காகவேனும்
பொறியியல் படித்துப்பார்

இறுதி ஆண்டு முடிக்கையில் 
bank manager சட்டை பிடித்தாலும் 
உறவுகள் 
உயிரெடுத்தாலும் 
விழித்துப் பார்க்கையில்
உன் கனவுகள்
களவு போயிருந்தாலும்
ஒரே பணிக்கு பலருக்கு 
Offer letter கொடுக்கப்பட்டாலும்
நீ தேர்வான 
companyஇல் இருந்து 
உன்னை அழைக்க மறந்(றுத்)தாலும்
பொறியியல் படித்துப்பார்
BPO - journal edition 
இரண்டில் ஒன்று 
இங்கேயே நிச்சயம்
பொறியியல் படித்துப்பார்
0

Wednesday, July 22, 2015

உன் பாதையில்

 

எதை மிதிப்பது ? எதை தவிர்ப்பது ?
உன் பாதையில் விஷச்செடிகளா ?
நிறையக் காண்பாய்


எதை மிதிப்பது ?
எதை தவிர்ப்பது ?


உன்னை அளந்திடு
பாதை புரிந்திடு
செடிகள் புரியும்

சில சமயம்,
மிதிப்பதை தவிர்ப்பாய்
தவிர்ப்பதை மிதிப்பாய்


நின்று விடாதே
திரும்பிப் பார்


வந்த பாதை நீளம் தெரியும்
மேலும் ஒரு அடி சுலபம்
இதை அது உணர்த்தும்...
0