* ஒரு வாரம் ஆனாலும் சார்ஜ் தீரும் என்கிற
கவலை இருந்ததே இல்லை!
* காவேரி ஆற்றில் மூழ்கி எடுத்தும் ,பொன்மலை ஸ்டேஷன் தண்டவாளத்தில் தவறி விழுந்தும்,உடைத்தே தீரவேண்டுமென சண்டை ஒன்றில் போட்டு உடைத்தும் கூட, கை குலுக்கியபடி சிரிக்கும் மொபைல் அது !
* கீ போர்டே தேய்ந்து போகும் அளவிற்கு மெசேஜ் அனுப்பிய மொபைல் அது !
* எழுந்து யாரையாவது அடிக்க தோன்றும் அளவுக்கு அலறும் அலாரம் அது !
* காலை தொடங்கி நைட் வரை எல்லாவற்றிற்கும் குரூப்
மெசேஜ் அனுப்பியே கொல்ல உதவிய மொபைல் அது !
*பந்து போல கூட பயன்படுத்தி இருக்கிறொம் ,
ஆனால் பந்தாவாக யாரும் அதைப் பயன்படுத்தியதில்லை
ஆன்ட்ராய்டுகளும் ஆப்பிள்களும் வந்தாலும் எங்களுக்கு அதுதான் அழகிய மொபைல் காலம் !!

No comments:
Post a Comment