ஆசியா உலகின் மிகப் பெரிய கண்டம், பல பழைய நாகரிகங்கள் ஆசியாவில் தான் தோன்றி, தழைத்தும் அழிந்தும் போயிருக்கின்றன. அமெரிக்க கண்டங்கள், ஐரோப்பியரால் கண்டு பிடிக்கப்படுவதற்கு முன்னால், உலக மக்கள் தொகையில் பெரும்பகுதி ஆசியாவில் தான் வாழ்ந்து வந்தது.
ஐரோப்பியர்கள், காட்டு விலங்குகளை வேட்டையாடி குகைகளில் வாழ்ந்து வந்த காலத்திலேயே ஆசிய சமுதாயங்கள் அறிவியலில் வியக்கத்தக்க விஷயங்க ளைச் செய்து முடித்திருந்தன. சீனா, இந்தியா போன்ற ஆசிய நாகரிகங் களுக்கிடையே பல்லாயிரக் கணக்கான ஆண்டுகளுக்கு முன்பே வர்த்தக உறவு தோன்றிவிட்டது. ஆசியாவின் நிலப்பரப்பு பெரியதென்பதாலும், தொடர்ச்சியாக இருப்பதாலும் கடல்வழி வணிகத்தைவிட தரைவழி வர்த்தகத்தையே வர்த்தகர்கள் விரும்பினர்.
இதனால் ஐரோப்பிய வணிகர்களுக்கு இருந்ததுபோல, ஆசிய வணிகர்களுக்கு கடல் கொள்ளையரின் அச்சுறுத்தல் இருந்ததில்லை. கொள்ளையர்களின் தொந்தரவால் ஒரு கடல்வழிப் பாதை ஆபத்தானதாக மாறினால், ஆசிய வணிகர்களால், அதற்கு பதில் வேறு கடல்வழி மற்றும் நிலவழிப் பாதைக ளைப் பயன்படுத்த முடிந்தது. இதனால் ஆசிய நாடுகளுக்குள் நடைபெற்ற வர்த்தகத்துக்கு, கடல்கொள்ளை அப்படி ஒன்றும் பெரிய தொந்தரவாக இருந்ததில்லை.
ஆனால், ஆசிய ஐரோப்பிய வர்த்தகத்தைப் பொறுத்தமட்டில் நிலைமை தலைகீழ், இந்த வர்த்தகத்துக்கு கடல் வழித் தொடர்புகள் இன்றியமை யாதவை, ஐரோப்பிய வணிகர்களுக்கு ஆசியாவுக்கான நிலவழிப் பாதைகள் ஆபத்து நிறைந்தவையாகவே விளங்கின. இதனால், ஆசியாவுடன் கடல் வழியாக வர்த்தகம் செய்யவே அவர்கள் விரும் பினார்கள். கடல்வழி வர்த்தகம் எங்கு தழைக்கிறதோ, அங்கு கூடவே கடல் கொள்ளையும் வந்துவிடுமென்பதால் ஆசிய கடற்பகுதிகளிலும் கடல் கொள்ளை வளரத் தொடங்கியது.
ஐரோப்பாவிலிருந்து இந்தியாவுக்கும், கிழக்காசிய நாடுகளுக்கும் போகும் ஐரோப்பிய சரக்குகள் முதலில் அரபிக் கடலை அடையவேண்டும். பதினாறாம் நூற்றாண்டுதான் அரபிக் கடலை அடையும் கடல் பாதை கண்டுபிடிக் கப்பட்டது. அதற்கு முன், ஆசியாவுக்குச் செல்லும் சரக்குகள் மத்திய தரைக்கடல் வழியாக எகிப்து வந்து, அங்கிருந்து நிலம் வழியாக செங்கடலுக்குக் கொண்டு செல்லப்பட்டன.
செங்கடல் துறைமுகங்களில் மீண்டும் கப்பல்களில் ஏற்றப்பட்டு, அரபிக்கடல் வழியாக இந்திய துறைமுகங்களுக்கு அனுப்பப்பட்டன. இந்த சரக்குக் கப்பல்களைச் சூறையாட அரபிக்கடலில் இரு பக்கமும் கொள்ளையர்கள் காத் திருப்பார்கள். இந்தக் கொள்ளையர்க ளைப் பற்றிய குறிப்புகள் ரோம் வரை படங்களில் இடம்பெற்றுள்ளன.
தற்கால குஜராத்துக்கும் கோவாவுக் கும் இடைப்பட்ட கடற்கரை பகுதி யில் கொள்ளையர்கள் தொந்தரவு இருப்பதாக வணிகர்களை எச்சரிக்கிறது.
இதன் மூலம் இரண்டாயிரம் ஆண் டுகளுக்கு முன்பே அரபிக் கடலில் கொள் ளையர்கள் தங்கள் கைவரிசையைக் காட்டி வந்தனர் என்பதைத் தெரிந்து கொள்ளலாம். மேலும், இந்தியாவின் கிழக்கு கடற்கரையிலும் பல கொள்ளை யர் தளங்கள் இருந்ததாக பெரிப்ளசில் குறிப்பிடப்பட்டிருக்கிறது.
இந்தக் காலத்தில் எழுதப்படட மற்ற இலக்கியங்களிலும் கொள்ளையர் களைப் பற்றிய குறிப்புகள் உள்ளன. புத்தமத இலக்கியப் படைப்பான ‘நித்தேசம்’ மதுரையிலிருந்து கிழக்கா சிய நாடுகளுக்கு பயணம் செய்யும் வணிகர்கள் சந்திக்கக் கூடிய அபாயங் களில் ஒன்றாக, கொள்ளையர்களைப் பற்றிச் சொல்கிறது.
ரோம வரலாற்றாளர் மூத்த பிளினி (Pliny the elder) ‘இந்திய கடற்கரை யோரம் செல்லும் கப்பல்கள், கொள் ளையர்களின் தாக்குதலைச் சமாளிக்க விற்களை ஏந்திய வீரர்களை வேலைக்கு அமர்த்தியிருந்தன’ என்று கூறுகிறார். மற்றொரு ரோம வரலாற்றாளரான டாலமி, கேரள, கர்நாடகக் கடற்கரைப் பகுதிகளில் பல கொள்ளையர் தளங்கள் இருந்ததாகக் குறிப்பிடுகிறார்.
ஏழாம் நூற்றாண்டில், அரேபியாவில் தோன்றிய இஸ்லாம் மதம் வேகமாக ஆசியாவில் பரவியதால், அரபிக் கடலில் கப்பல் போக்குவரத்து அதிக ரித்தது. முஸ்லிம்களின் புனித நகரான மெக்காவுக்கு ஹஜ் பயணம் மேற்கொள் ளும் பயணி கப்பல்களும், அரபு வணி கர்களின் கப்பல்களும் கொள்ளையர்க ளுக்கு எளிதான இலக்காயின.
பாக்தாத் காலிப் (பேரரசர்) இந்தியா வுக்கு அனுப்பிய தூதுக்குழுக்கள் பயணித்த கப்பல்களைக் கூட கொள் ளையர்கள் விட்டு வைக்கவில்லை. இந்தத் தாக்குதல்களைச் சாக்காகப் பயன்படுத்திக்கொண்டு சிந்துதேசத்தின் மீது படையெடுத்த அரபுப் படைகள் கொள்ளையர்களின் தளமான தெபால் துறைமுகத்தைத் தாக்கி அழித்தன.
ரோமப் பேரரசு வீழ்ந்து, ஆயிரம் ஆண்டுகளுக்கு பின்னால் இந்தியா வந்த வெளிநாட்டு பயணிகளும் இதை உறுதிப்படுத்துகிறார்கள். பதின் மூன்றாம் நூற்றாண்டில் இந்தியாவுக்கு வந்த வெனிஸ் நாட்டு வணிகர் மார்கோ போலோ, கொள்ளையர்களுடைய தொழில் முறைகளைப் பற்றி விரிவாக எழுதியுள்ளார்.
குஜராத்துக்கும் மலபாருக்கும் இடை ப்பட்ட கடற் பகுதியில், நூற்றுக்கணக் கான கொள்ளையர்கள் கப்பல்கள் இருந்தன என்றும், அவை கூட்டணி அமைத்து வணிகக் கப்பல்களைக் கொள்ளையடித்ததாகவும் அவரது குறிப்புகள் சொல்கின்றன.
இந்தியாவிலிருந்து சீனாவுக்கு சென்று கொண்டிருந்த பதூதாவின் கப்பல் மலபார் கரையோரத்தில் கொள்ளை யர்களிடம் சிக்கிக்கொண்டது. அவர்கள் கப்பலைக் கொள்ளையடித்ததுடன் பதூதாவின் உடைமைகளையும் பிடுங் கிக்கொண்டனர். தான் அணிந்திருந்த ஆடைகளுடன் மட்டும் அவர்கள் தன் னைத் தப்பிக்கவிட்டதாக பதூதா குறி ப்பிட்டுள்ளார்.
இதே காலகட்டத்தில் இந்தியாவுக்கு வந்த பாரசீக வரலாற்றாளர் ஃபிரிஷ் டாவுக்கு இதே போன்ற அனுபவம் நிகழ்ந்தது. பதினெட்டாம் நூற்றாண்டு வரை இந்தியாவின் மேற்குக் கடற்கரை கொள்ளையர்களுடைய ஆதிக்கத்தில் தான் இருந்தது. இந்திய கண்டத்தின் தேசங்களிடம் வலுவான கடற்படை எதுவும் இல்லாததே இதற்குக் காரணம்.
கொள்ளையர்களைப் பற்றிய வெளி நாட்டுப் பயணிகளின் குறிப்புகளையும், உள்நாட்டு அரசர்களின் ஆவணங்களை யும் சந்தேகத்துடனேயே பார்க்க வேண் டியுள்ளது. ஏனெனில் தங்களுடைய எதி ரிகள் அனைவரையும் கடல் கொள்ளை யர்கள் என்று குற்றஞ்சாட்டும் பழக்கம் அக்காலத்தில் பரவலாக இருந்தது. இப் படி சந்தேகக் கண்கொண்டு வரலாற்று ஆதாரங்களைப் பார்த்தாலும், ஒன்று மட்டும் உண்மை. இந்தியாவின் மேற் குக் கடற்கரைப் பகுதிகளில் கொள்ளை யர்களுக்கு என்றுமே பஞ்சம் இருந்த தில்லை.
மலபார் கொள்ளையர்களுக்கும் சங்கமேஷ்வர் கொள்ளையர்களுக்கும் இந்தியாவுக்கு வரும் போர்த்துகீசிய வணிகக் கப்பல்கள் எளிதாக இரையாயின. இந்தக் காலத்தில் இந்தியாவுக்கு வருகை தந்த போர்த்துக்கீசிய பயணிகள் அனைவரும் தவறாமல் கடல் கொள் ளையர்களைப் குறிப்பிட்டிருந்தார்கள். அதிலிருந்து நிலைமையின் தீவிரத்தை அறிந்துகொள்ள முடிகிறது.
வர்த்தகம் செய்ய வந்த கப்பல்களோடு, கொள்ளையடிக்க வந்த தனியார் போர்க்கப்பல்களும் சேர்ந்துகொண்டன. இந்திய வணக் கப்பல்களோடு, இந்தி யாவிலிருந்து மெக்காவுக்கு ஹஜ் பய ணிகளை ஏற்றிச் செல்லும் பயணிகள் கப்பல்களையும் இந்த ஐரோப்பிய தனியார் கப்பல்கள் தாக்கத் தொடங்கின. வியாபாரம் செய்ய வந்த சாதாரண போர்த்துகீசிய கப்பல் கேப்டன்கள் கூட தனியார் கொள்ளையர்கள் சம் பாதிக்கும் பணத்தைக் கண்டு சபல மடைந்து, கொள்ளையர்களாக மாறத் தொடங்கினர்.
மாயை தீவுக்கூட்டம் போர்த்து கீசிய கொள்ளையர்களின் தலைமை யிடமாக இருந்தது. போர்த்துகீசிய அதிகாரிகளால் இந்தக் கொள்ளையர் களை ஒன்றும் செய்ய முடியவில்லை. கொள்ளையர்களை அழிக்க அனுப்பப் பட்ட போர்க் கப்பல்களும் அவர்களுடன் சேர்ந்து கொள்ளைத் தொழிலில் ஈடுபட ஆரம்பித்தன.
ஒருபக்கம் வணிகக் கப்பல்களைக் குறிவைக்கும் உள்ளூர்க் கொள்ளையர்கள், இன்னொரு பக்கம் இஷ்டத்துக்குக் கொள்ளையடித்துக் கொண்டிருக்கும் தங்கள் சொந்த நாட்டு தனியார் போர்க் கப்பல்கள், போர்த்துகீசிய ஆட்சியாளர்கள் திணறிப் போனார்கள், போதாக்குறைக்கு துருக்கியின் ஓட்டோ மான் பேரரசின் கடற்படையும் அவ் வப்போது அரபிக்கடலில் போர்த்துகீசியக் கப்பல்களைத் தாக்கி வந்தது.
பிற ஐரோப்பிய நாடுகள், இந்தியாவில் காலனிகளை உருவாக்கத் தொடங்கிய பின்னர் ஐரோப்பிய அரசியல் நிலவரப்படியே இங்கும் நடந்துகொண் டன. இந்திய நிலப்பரப்புகளைப் போலவே இந்திய கடல்களும் மெல்ல மெல்ல ஐரோப்பியரது ஆதிக்கத்தின் கீழ் வரத் தொடங்கின.
பதினெட்டாம் நூற்றாண்டில் முகலாய பேரரசு வீழ்ந்த பின் இந்தியாவின் பெரும் பகுதி மராட்டிய பேரரசின் கட்டுப் பாட்டுக்குள் வந்தது. வளர்ந்து வந்த ஐரோப்பியர்களுக்கும் மராட்டியர்களுக்கு அரபிக் கடலில் பலப்பரீட்சைத் தொடங் கியது. அரபிக் கடலில் ஐரோப்பிய, குறிப்பாக ஆங்கில கிழக்கிந்திய கம்பெனியின் கடலாதிக்கத்தை எதிர்த்த மராட்டியர்களுள் கனோஜி ஆங்கரே குறிப்பிடத்தக்கவர்.
பல ஆண்டுகளாக ஆங்கில கப்பல் படையை எதிர்த்துப் போரிட்ட கனோஜி ஆங்கரேயை மேலை நாட்டு சமகால வரலாற்றாளர்கள். ‘கடல் கொள்ளையன்’ என்றே அழைத்தனர். அரசியல் எதிர்களை கடல் கொள்ளையன் என்று குற்றம் சாட்டுவது அந்தக் காலத்தில் சர்வ சாதாரணம்.
மராட்டிய கடற்படையின் தலைசிறந்த தளபதி என்று கருதப்படும் ஆங்கரே பதினெட்டாம் நூற்றாண்டின் முற்பகுதி யில் ஆங்கிலேயருக்கு சிம்ம சொப்பனமாக விளங்கினார். மஹா ராஷ்ட்ராவின் கரையோரத்தில் பலமான தீவுக் கோட் டைகளிலிருந்து செயல்பட்ட ஆங்கரேயின் கடற்படை ஐரோப்பிய கப்பல்களைக் குறிவைத்துச் சூறையாடின.
ஆங்க்ரேயைத் தோற்கடிக ஆங்கிலேயர் செய்த முயற்சிகள் அனைத்தும் தோல் வியில் முடிந்தன. அவர் இறக்கும் வரை அரபிக்கடல் ஐரோப்பியர் வசமாவதற்குப் பெரும் முட்டுக் கட்டையாக இருந்தார். அவரது மறைவுக்குப் பின்னரேயே கிழக்கிந்திய கம்பெனி அவர்களை வென்று அரபிக்கடல் பகுதியைத் தனது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்தது.
பத்தொன்பதாம் நூற்றாண்டு தொடங்கும்போது இந்திய கடற் பகு திகள் அனைத்தும் முழுமையாக கம் பெனியின் கைவசம் இருந்தன. ஆங்கில கடற்படை பலத்துக்கு முன்னால் இந் திய கொள்ளையர்களால் தாக்குப்பிடிக்க முடியவில்லை. இரண்டாயிரம் ஆண்டு களாகத் தொடந்து நடந்து வந்த இந்திய கொள்ளையர்களின் அட்டகாசம் ஒரு வழியாக முடிவுக்கு வந்தது.
நன்றி: கடற்கொள்ளையர்கள் (நூல்)
No comments:
Post a Comment