Showing posts with label மருத்துவம். Show all posts
Showing posts with label மருத்துவம். Show all posts

Thursday, July 23, 2015

அவகேடாவின் (அலிப்பேர) மருத்துவ குணங்கள்!




அவகேடாவில் 25க்கும் மேற்பட்ட ஊட்டச்சத்துக்கள் அடங்கியுள்ளன.
இதில் உள்ள வைட்டமின் பி6, போலிக் ஆசிட் மற்றும் ஒலியிக் அமிலம் (oleic acid) ஆகியவை இதயம் தொடர்பான நோய்கள் வருவதைத் தடுக்கின்றன. மேலும், இந்தச் சத்துக்கள் இதயத்தின் ஆரோக்கியத்தை மேம்படுத்துகின்றன.


குறையும் கொழுப்பின் அளவு


பீட்டா சிடோஸ்டெரால் (beta sitosterol) அதிகளவில் உள்ளதால் ரத்தத்தில் உள்ள கொழுப்பின் அளவை இந்தப் பழம் வெகுவாகக் குறைக்கும். ஹைபர்கொலஸ்ட்ரொலெமியா (Hypercholesterolemia) என்ற நோயின் ஆரம்பக் கட்டத்தில் இருக்கும் ஒருவர், 7 நாட்கள் தொடர்ந்து அவகேடோவை சாப்பிட்டு வந்தால், அந்த நோயின் தாக்கம் 17 சதவிகிதம் வரை குறையும்.


ரத்தக் கொதிப்பு


வாழைப் பழத்தில் இருக்கும் பொட்டாஷியத்தை விட அவகேடோவில் 35 சதவிகிதம் அதிகமாகவே உள்ளது. இதனால் உயர் ரத்த அழுத்தம் கட்டுப்படும். மேலும், வாழைப்பழத்தில் அதிகளவு நார்ச்சத்துக்கள் உள்ளதால் செரிமானத்துக்கு ஏற்றது. ரத்தத்தில் உள்ள சர்க்கரையைச் சமன் செய்கிறது.


அதிகரிக்கும் பார்வை திறன்


லுடீன் (lutein) என்ற ஆன்டி ஆக்சிடன்ட், வயதாகிய பிறகும், பார்வை திறன் குறையாமல் தடுக்கிறது. மேலும், கண்களில் ஏற்படும் புரையை வளர விடாமல் தடுக்கும் ஆற்றல் அவகேடோவில் உள்ளது.


புற்றுநோயை தடுக்கும் ஆன்டி ஆக்சிடன்ட்


ஆன்டி ஆக்சிடன்ட் இதில் நிறைந்திருப்பதால் ஆண்களுக்கு வரும் ப்ராஸ்டேட் புற்றுநோயையும், பெண்களுக்கு வரும் மார்பக புற்றுநோயையும் தடுக்கிறது.


மூப்படைதலை தடுத்து இளமையைத் தக்க வைக்கும். நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கச் செய்யும். நரம்பு மண்டலத்தை வலுப்படுத்தும். செல்களைச் சேதமடையாமல் பாதுகாக்கும்.


அவகேடா ஜூஸ்


அவகேடோவை அரைத்து ஜூஸ் போட்டு, தேன் சேர்த்து குடித்து வந்தால், தொப்பை குறைந்துவிடும்.


மேலும் இதில் நல்ல கொழுப்புக்கள் இருப்பதால், இது உடலில் உள்ள கலோரிகளை எரித்துவிடும்.


0

கெட்ட கொழுப்பை கட்டுப்படுத்தி நல்ல கொழுப்பை அதிகரிக்கும் பிஸ்தா!






பிஸ்தாவில் அதிக அளவில் நன்மைகள் நிறைந்துள்ளது. பிஸ்தா உடலின் கெட்ட கொழுப்பை கட்டுப்படுத்தி நல்ல கொழுப்பை அதிகரிக்கின்றது இதன் மூலம் உடலின் தேவையற்ற கொழுப்புத் தன்மைகள் நீக்கப்பட்டு இதயம் பலமாக செயல்பட உதவுகின்றது. பிஸ்தாவில் உள்ள வைட்டமின் ஏ, வைட்டமின் ஈ மற்றும் நோயெதிர்ப்பு அழற்சி தன்மைகள் உடலில் ஏற்படும் நீர் கட்டி மற்றம் வீக்கம் போன்றவை ஏற்படாமல் தடுக்கின்றது. 




பிஸ்தாவில் உள்ள 60மூ பாஸ்பரஸ் டைப் 2 நீரழிவு நோயில் இருந்து பாதுகாக்கிறது. மேலும் பிஸ்தாவில் உள்ள பாஸ்பரஸ் புரதச்சத்தை அமினோ அமிலமாக செய்து, குளுக்கோஸ் தன்மையை கொடுத்து, உடலுக்கு வலிமை சேர்க்கிறது. பிஸ்தாவில் உள்ள வைட்டமின் பி6 நரம்பிற்கு மிகவும் நல்லது. வைட்டமின் பி6 ஒரு ஆரோக்கியமான நோய் எதிர்ப்பை அதிகரிக்கும் காரணியாகும். இதனால் உடலில் இரத்தத்தின் ஓட்டம் சீராக ஓடுகின்றது. இத்தகைய வைட்டமின் பி6 பிஸ்தாவில் அதிக அளவில் உள்ளது. 


பிஸ்தாவில் உள்ள வைட்டமின் பி6 இரத்தத்தின் ஹீமோகுளோபின் எண்ணிக்கையை அதிகரிக்க உதவுகிறது இதனால் மூளை நல்ல முறையில் செயல்படுகின்றது. மண்ணீரல் போன்ற சுரப்பி, நாளமில்லா சுரப்பி போன்றவை ஆரோக்கியமான மற்றும் தொற்று நோயை எதிர்க்கும் சுரப்பியாகும். அவை இரத்தத்தில் உள்ள வெள்ளை இரத்த அணுக்கள் சரியாக பணி புரிண செய்கின்றது. 


இத்தகைய சக்தியானது பிஸ்தாவில் கிடைக்கின்றன. பிஸ்தாவில் உள்ள வைட்டமின் ஈ சருமத்தை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள உதவுகிறது. எப்படியெனில் இதனை சாப்பிட்டால் இது சருமத்தின் மென்சவ்வுகளை ஒருங்கிணைக்கிறது. இதனால் சூரிய கதிர்கள் நம்மை தாக்காமல் பாதுகாக்கின்றது. இதன் மூலம் சருமமானது ஆரோக்கியமாகவும், அழகாகவும் காணப்படுகினறது. 


பிஸ்தாவில் உள்ள வைட்டமின் ஈ சருமத்தில் தோன்றும் வயதான தோற்றத்தை போக்கி இளமையான தோற்றத்தை அளிக்கின்றது இதற்கு இந்த பிஸ்தாவில் உள்ள எண்ணெய்ப் பசை தான் காரணம். இதில் உள்ள வைட்டமின் பி6 இரத்த எண்ணிக்கையின் அளவை அதிகரிக்க உதவுகின்றது. இதனால் இரத்த வெள்ளை அணுக்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டு. 


புற்றுநோய் மற்றும் நோய்த்தொற்றுக்கள் தாக்குவதைத் தடுக்கிறது. பிஸ்தாவை தினமும் எடுத்து கொள்வதால், சருமத்திற்க நல்ல நிறத்தை கொடுக்க முடியும் ஏனெனில் இதில் அத்தியாவசிய கொழுப்பு அமிலங்கள் கணிசமான அளவில் உள்ளது. மேலும் வழக்கமான உணவில் பச்சை ஆப்பிள்களை சேர்த்து கொண்டாலும், மினுமினுப்பான சருமத்தைப் பெற முடியும்.

0

உடலில் ஆங்காங்கு தேங்கியுள்ள கொழுப்பைக் கரைக்கும் அற்புத ஜூஸ்! |





வயிற்றைச் சுற்றித் தேங்கியுள்ள கொழுப்பைக் கரைப்பது பலரது கனவாக இருக்கலாம். இதற்கு அழகான உடலமைப்பை பெற வேண்டும் என்ற ஆசை ஒரு பக்கமாக இருந்தாலும், உடலில் தேங்கியுள்ள கொழுப்பால் ஏற்படும் பல்வேறு ஆரோக்கிய பிரச்சனைகளை தடுக்க வேண்டும் என்பதும் ஓர் முக்கிய காரணம் ஆகும்.


உங்களுக்கு குனிந்து பாதத்தை பார்க்க முடியாத அளவில் தொப்பை தொங்குகிறதா? அப்படியெனில் அவற்றைக் குறைக்க உங்களுக்கு ஒர் அற்புத பானத்தை கீழே கொடுத்துள்ளோம் . அதைப் படித்து அவற்றை அன்றாடம் குடித்து வந்தால், நிச்சயம் வயிற்றில் தேங்கியுள்ள கொழுப்பை மட்டுமின்றி, உடலில் ஆங்காங்கு தேங்கியுள்ளதையும் குறைக்கலாம்.

ஆனால் இந்த பானத்தை குடிக்கும் போது, அன்றாடம் உடற்பயிற்சியையும் தவறாமல் செய்து வர வேண்டும். மேலும் ஆரோக்கியமற்ற கொழுப்புக்கள் நிறைந்த உணவுகளை முற்றிலும் தவிர்க்க வேண்டும். சரி, இப்போது உடலில் ஆங்காங்கு தேங்கியுள்ள கொழுப்பைக் கரைக்கும் அந்த அற்புத ஜூஸ் தயாரிக்க பயன்படும் பொருட்களையும், அந்த ஜூஸை எப்படி செய்வதென்றும் பார்ப்போமா!!!

எலுமிச்சை

எலுமிச்சையில் உள்ள சிட்ரிக் ஆசிட் மற்றும் வைட்டமின் சி, உடலின் ஆற்றலை அதிகரித்து, கலோரிகளை எரித்து, உடலில் தேங்கியுள்ள கொழுப்புக்களை கரைத்து, வெளியேற்ற பெரிதும் உதவியாக இருக்கும்.


ஆரஞ்சு

ஆரஞ்சு பழத்திலும் வைட்டமின் சி மற்றும் சிட்ரிக் ஆசிட் உள்ளது. இதுவும் எலுமிச்சை பழத்தைப் போன்றே மிகவும் சக்தி வாய்ந்த உணவுப் பொருள். மேலும் இந்த பழம் ஜூஸிற்கு நல்ல சுவை மற்றும் மணத்தைத் தரும். அதே நேரம் இது கொழுப்புக்களை கரைக்கும் நொதிகளை வெளியேற்றி, கொழுப்பை கரைத்து எடையைக் குறைக்க உதவும்.

பார்ஸ்லி

அன்றாட உணவில் சிறிது பார்ஸ்லியை சேர்த்து வந்தால், அதில் உள்ள சத்துக்கள், உடலின் நீர்ச்சத்தை தக்க வைப்பதோடு, ஆங்காங்கு தேங்கியுள்ள டாக்ஸின்களை வெளியேற்றி, மெட்டபாலிசத்தை அதிகரித்து, விரைவில் எடை மற்றும் தொப்பை குறைய உதவி புரியும்.

தண்ணீர்

அன்றாடம் தண்ணீரை எவ்வளவுக்கு எவ்வளவு அதிகமாக எடுக்கிறோமோ, அந்த அளவில் உடலில் நச்சுக்கள் தேங்குவதைத் தடுக்கலாம். மேலும் தண்ணீர் உடலுறுப்புக்களின் சீராக இயக்கத்திற்கு பெரிதும் உதவியாக இருப்பதோடு, மெட்டபாலிசத்தை அதிகரிக்கும்.

ஜூஸ்

செய்ய தேவையான பொருட்கள் எலுமிச்சை - 3 ஆரஞ்சு - 1 பார்ஸ்லி - 1 கொத்து தண்ணீர் - 2.5 லிட்டர்

ஜூஸ் செய்யும் முறை

முதலில் 2 எலுமிச்சையை பிழிந்து 2.5 லிட்டர் நீரில் கலந்து கொள்ள வேண்டும். பின் மீதமுள்ள 1 எலுமிச்சை மற்றும் ஆரஞ்சுப் பழத்தை வட்ட துண்டுகளாக வெட்டி, நீரில் போட்டுக் கொள்ள வேண்டும். அடுத்து அதில் பார்ஸ்லியை நறுக்கி சேர்த்து நன்கு கலந்து, நாள் முழுவதும் தண்ணீருக்கு பதிலாக குடித்து வந்தால், கொழுப்புக்கள் கரையும்
நன்றி : தமிழ் 4 ஹெல்த்

0

சர்க்கரை நோயாளிகள் ஏன் வெந்தயத்தை சாப்பிட வேண்டும்?


சர்க்கரை நோய் வந்துவிட்டால், உண்ணும் உணவில் கவனமாக இருக்க வேண்டும் என்பது அனைவரும் அறிந்த விஷயமே. அதேப்போன்று சர்க்கரை நோய் உள்ளவர்களுக்கு ஒருசில சமையல் பொருட்கள் மிகவும் நல்லது. அதில் ஒன்று தான் வெந்தயம். வெந்தயமானது சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் சாப்பிட ஏற்றது.

மேலும் வெந்தயம் நீரிழிவை கட்டுப்பாட்டுன் வைப்பதோடு, உடலை குளிர்ச்சியுடன் வைத்துக் கொள்ள உதவும். அதே சமயம் வெந்தயம் உடலில் பல பிரச்சனைகளுக்கு காரணமாக விளக்கும் கொலஸ்ட்ராலுக்கும் நல்லது. வெந்தயம் எப்படி சர்க்கரை நோயாளிகளுக்கு நல்லது என்று கேட்கலாம். மேலும் ஒவ்வொருவரும் இதைப் பற்றி தெரிந்து கொள்ள வேண்டியதும் அவசியம்.

ஏனெனில் எந்த ஒரு மருத்துவ பொருளையும் எடுத்துக் கொள்ளும் முன், அதனைப் பற்றி முற்றிலும் தெரிந்து கொண்டு எடுப்பதால், மனதில் நம்பிக்கை அதிகரிப்பதோடு, அந்த நம்பிக்கையினால் எடுத்துக் கொள்ளும் மருந்தின் முழு சக்தியையும் காணலாம்.

வெந்தயத்தில் உள்ள சத்துக்கள் வெந்தயத்தில் வைட்டமின் ஏ, புரோட்டீன், பாஸ்பரஸ், இரும்புச்சத்து, பொட்டாசியம், தையாமின், ரிபோஃப்ளேவின், நிக்கோடினிக் அமிலம், சோடியம், சுண்ணாம்புச்சத்து போன்றவை வளமாக நிறைந்துள்ளது.

இரத்த சர்க்கரையின் அளவு சாதாரணமாக நமது இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவு 80-110 மி.லி வரை இருக்கும். மேலும் இது ஒவ்வொருவருக்கும் எடுத்துக் கொள்ளும் கலோரிகளின் அடிப்படையில் வேறுபடும்.

இன்சுலின் வேலை பொதுவாக நாம் கலோரி நிறைந்த உணவுகளை உட்கொள்ளும், இரத்த சர்க்கரையின் அளவு அதிகமாகும். அப்படி அதிகமாகும் போது அதனை இன்சுலின் தான் கட்டுப்படுத்தும்.

நீரிழிவு நோயாளிகளின் பிரச்சனை நீரிழிவு நோயாளிகளுக்கு இன்சுலின் சுரப்பில் ஏற்றத்தாழ்வு ஏற்படும். ஆனால் வெந்தயத்தை சர்க்கரை நோயாளிகள் சாப்பிட்டு வந்தால், இன்சுலின் சுரப்பு அதிகமாகி, இன்சுலின் வேலை சீராக நடக்கும்.

வெந்தயம் எடுக்கும் முறை நீரிழிவு நோயாளிகள், வெந்தயத்தை இரவில் படுக்கும் போது நீரில் ஊற வைத்து, மறுநாள் காலையில் அந்த நீரோடு வெந்தயத்தையும் சாப்பிட்டு வந்தால், இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவு கட்டுப்பாட்டுடன் இருக்கும்.

மருத்துவ ஆலோசனை அவசியம் என்ன தான் இருந்தாலும், கை மருத்துவத்தை மேற்கொள்ளும் முன், மருத்துவரிடம் கலந்தாலோசித்து, அவரின் பரிந்துரையின் பேரில் எடுப்பதே நல்லது.

கொலஸ்ட்ரால் குறையும் முக்கியமாக வெந்தயம் ஊற வைத்த நீரைக் குடித்து வந்தால், கொலஸ்ட்ரால் அளவும் குறையும்.

0

Wednesday, July 22, 2015

அல்சரை குணப்படுத்தும் அற்புத மருந்து!

‘‘வயிற்றை வலிக்கிறதா? ‘அல்ச’ராகத்தான் இருக்கும். ஒரு ‘ஜெலுசில்’ போட்டுக்கோ, சரியாகிவிடும்.’’ - பத்து வருடங்களுக்கு முன்னால் வயிற்றுவலி வந்தவர்களுக்கு இப்படித்தான் இலவச மருத்துவ ஆலோசனை கூறுவார்கள். இன்றைக்கு இந்த ஆலோசனை இப்படியாக மாறி இருக்கிறது. ‘‘அல்சர் வலிக்கு ‘பேன்டபிரசோல்’ (Pantoprazole) மாத்திரை போட்டுக்கொண்டால் சரியாகிவிடும்!’’

அது என்ன பேன்டபிரசோல்?

நம் இரைப்பையில் ஏற்படுகிற அழற்சியையும் புண்ணையும் குணப்படுத்துகிற மருந்து, பேன்டபிரசோல்; இப்போதுள்ள அல்சர் மருந்துகளில், பக்க விளைவுகள் அவ்வளவாக இல்லாத, வயிற்றுவலியை உடனே கட்டுப்படுத்துகிற அற்புத மருந்து இது; மாத்திரையாகவும் ஊசியாகவும் கிடைக்கிறது. பேன்டபுரசோல் அல்சரை எப்படிக் குணப்படுத்துகிறது என்பதைத் தெரிந்துகொள்வதற்கு முன்பு அல்சர் எப்படி ஏற்படுகிறது என்பதைத் தெரிந்துகொள்வோம்.

உணவுக்குழாய், இரைப்பை, முன்சிறுகுடல் ஆகியவற்றில் ஏற்படும் புண்களைப் பொதுவாக ‘பெப்டிக் அல்சர்’ (Peptic ulcer) என்கிறோம்.

இரைப்பையில் புண் ஏற்பட்டால் ‘கேஸ்ட்ரிக் அல்சர்’ (Gastric ulcer) என்றும், முன்சிறுகுடலில் புண் ஏற்பட்டால் ‘டியோடினல் அல்சர்’ (Duodenal ulcer) அழைக்கிறோம். இரைப்பையில் உணவு செரிமானம் ஆவதற்கு ஹைட்ரோகுளோரிக் அமிலமும் பெப்சின் என்சைமும் தேவை.

இரைப்பைச் சுவர்களில் நிறைய அமிலச் சுரப்பிகள் உள்ளன. இவற்றில் உள்ள பெரைய்ட்டல் செல்கள் ஹைட்ரோ குளோரிக் அமிலத்தைச் சுரக்கின்றன; சீஃப் செல்கள் பெப்சினைச் சுரக்கின்றன. இந்த இரண்டும் சில காரணங்களால் அளவுக்கு அதிகமாகச் சுரக்கும்போது, இரைப்பை மற்றும் முன்சிறுகுடல் சுவற்றில் உள்ள மியூக்கஸ் படலம் வீங்கிவிடும். இதை ‘இரைப்பை அழற்சி’ (Gastritis) என்கிறோம். இதற்கு சிகிச்சை பெறத் தவறினால், நாளடைவில் இது இரைப்பைப் புண்ணாக மாறி விடும்.

காரம், புளிப்பு, மசாலா மிகுந்த உணவு மற்றும் எண்ணெயில் பொரித்த உணவுகளை அதிகமாகச் சாப்பிடுவது, மது அருந்துவது, புகைபிடிப்பது, கோலா, காபி, தேநீர் பானங்களை அதிகமாகக் குடிப்பது, ஸ்டீராய்டு மாத்திரைகள் மற்றும் ஆஸ்பிரின், புரூஃபென் போன்ற வலி நிவாரணி மாத்திரைகளை மருத்துவரின் ஆலோசனை இல்லாமல் அடிக்கடி சாப்பிடுவது,பட்டினி கிடப்பது போன்ற தவறான உணவுப் பழக்கங்கள் இரைப்பைப் புண்ணுக்கு வரவேற்பு கொடுக்கின்றன.

சுகாதாரமற்ற குடிநீர், கலப்பட உணவு, மாசடைந்த சுற்றுச்சூழல் போன்ற காரணங்களால் ‘ஹெலிகோபாக்டர் பைலோரி’ (Helicobacter pylori) எனும் கிருமி உணவுப் பாதைக்குள் நுழைந்து இரைப்பைப் புண்ணை உண்டாக்குகிறது.

மனக்கவலை, பணியில் பரபரப்பு, கோபம், தூக்கமின்மை போன்ற காரணிகளும் இரைப்பைப் புண் வருவதைத் தூண்டுகின்றன. நேரம் தவறி சாப்பிடுபவர்களுக்கும், காலை உணவைத் தொடர்ந்து தவிர்ப்பவர்களுக்கும் இரைப்பைப் புண் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம், இந்த நோய் உள்ளவர்களுக்கு நெஞ்சுப் பகுதியில் எரிச்சல் ஏற்படும். புளித்த ஏப்பம், குமட்டல், வாந்தி உண்டாகும். இரைப்பை காலியாக உள்ள நள்ளிரவு நேரங்களிலும், விடியற்காலையிலும் மேற்புற வயிற்றில் அடிக்கடி வலி வரும். புண் உள்ள இடத்தில் அமிலம் படுவதால், இந்த வலி ஏற்படுகிறது. 

பொதுவாக, சாப்பிட்டதும் வயிற்றுவலி அதிகமானால், அது கேஸ்ட்ரிக் அல்சர். சாப்பிட்டதும் வலி குறைந்தால், அது டியோடினல் அல்சர்.இந்த இரண்டு அல்சர்களுக்கும் நல்லதொரு தீர்வு தருகிறது பேன்டபுரசோல்.இதை அமெரிக்காவில் அட்லான்டா நகரத்தில் இயங்கி வரும் பைக் குல்டென் (Byk Gulden) எனும் மருந்து நிறுவனம் கண்டுபிடித்தது. இந்தக் கண்டுபிடிப்புக்கு முன்னால் அல்சரைக் கட்டுப்படுத்த சிமெட்டிடின், ரேனிட்டிடின், ஃபெமோட்டிடின் என்ற மருந்துகள் கொடுக்கப்படுவது வழக்கத்தில் இருந்தது.

1973ல் கிளாக்சோ நிறுவனத்தைச் சேர்ந்த ஜேம்ஸ் பிளாக் என்பவர் அல்சரைக் குணப்படுத்த புதிய வழியைக் கண்டுபிடித்தார். இரைப்பையில் உள்ள பெரைய்ட்டல் செல்களை, ஹிஸ்டமின், கேஸ்ட்ரின், அசிடைல்கொலின் எனும் மூன்று வேதிப்பொருள்கள் தூண்டும்போதுதான் ஹைட்ரோகுளோரிக் அமிலத்தை அந்த செல்கள் சுரக்கின்றன.

எனவே இந்தத் தூண்டும்பொருள்களைக் கட்டுப்படுத்தினால் அமிலச் சுரப்பு குறைந்துவிடும் என்ற அடிப்படையில் ‘சிமெட்டிடின்’ என்ற மருந்தைக் கண்டுபிடித்துப் பயன்படுத்தி வந்தார். அதே நிறுவனத்தைச் சேர்ந்த ஜான் பிரட்ஷா (John Bradshaw) என்பவர் ரேனிட்டிடின் என்ற மருந்தைக் கண்டுபிடித்தார்.

‘இவை இரண்டும் இரைப்பையில் உள்ள ஹிஸ்டமின் ஏற்பான்களுக்குள் ஹிஸ்டமின் நுழைவதைத் தடுத்துவிடும் என்பதால் அமிலம் சுரப்பது குறைந்துவிடும்; இரைப்பைப் புண் குணமாகும்’ என்றனர்.

ஆனால், இந்த மருந்துகளால் இரண்டு சிரமங்கள் உண்டாயின. ஒன்று அல்சர் குணமாக தாமதமானது. அடுத்து, அல்சரிலிருந்து ரத்தம் கசிந்தால் உடனே அதை நிறுத்த முடியவில்லை. இதனால் அல்சருக்கு வேறு சிறந்த மருந்தைக் கண்டுபிடிக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டது.

1977ல் ஜார்ஜ் சாச், ஜான் ஃபர்ட் எனும் இருவர் ‘இரைப்பையில் அமிலம் சுரக்கிற சுழற்சிப்படிகளின் இறுதியில் ‘ஹைட்ரஜன், பொட்டாசியம் ஏடிபேஸ்’ (H+ K+ ATPase) எனும் என்சைம்தான் முக்கியமாக ஈடுபடுகிறது. இதைத் தடுத்துவிட்டால், அமிலம் சுரப்பது கட்டுப்படும்’ என்ற புதிய கருத்தைத் தெரிவித்தனர்.

இந்த என்சைமுக்கு ‘புரோட்டான் பம்ப்’ என்று பெயரிட்டனர். இந்தக் கோட்பாட்டை அடிப்படையாக வைத்து 1979ல் சுவீடன் நாட்டில் ஹசல் நிறுவனம் ‘ஓமிபிரசோல்’ என்ற மருந்தைத் தயாரித்தது.

இதுதான் முதன்முதலில் கண்டுபிடிக்கப்பட்ட புரோட்டான் பம்ப் தடுப்பு மருந்து. இதன் வேதிப்பண்பைத் தொடர்ந்து ஆராய்ச்சி செய்துவந்த பைக் குல்டென் நிறுவனம், இதன் வேதிக்கட்டமைப்பில் சில மாற்றங்களைச் செய்து 1986ல் பேன்டபிரசோல் மருந்தைக் கண்டு பிடித்தது. ஆனால், 1994ல்தான் மக்கள் பயன்பாட்டுக்கு வந்தது.

இன்றைய இயந்திரத்தனமான வாழ்க்கைமுறையில் மன அழுத்தம் காரணமாகவே பெரும்பாலோருக்கு அல்சர் வருகிறது. இந்தவகை அல்சரைக் குணப்படுத்தும் ஆற்றல் மற்ற அல்சர் மருந்துகளைவிட பேன்டபுரோசலுக்குத்தான் அதிகம். ரத்தக் கசிவுள்ள அல்சரைக் கட்டுப்படுத்துவதிலும் இதுவே முதலிடம் வகிக்கிறது.

0

ஆண்களுக்கு மட்டும் ஏன் தொப்பை வருகிறது..?



பெண்களை விட ஆண்களுக்கு தான் தொப்பை வருகிறது. மேலும் சமீபத்திய ஆய்வு ஒன்றில் 76% இளம் ஆண்களுக்கு தொப்பை இருப்பது தெரிய வந்துள்ளது. இதற்கு காரணம் நிறைய உள்ளன. அதில் ஒன்று தான் பீர். ஆண்கள் பீரை அதிகம் குடிப்பார்கள். அதுமட்டுமின்றி, பார்ட்டி என்றதும் அவர்கள் வாயில் இருந்து வரும் முதல் வார்த்தை “மச்சி… அப்ப ஒரு பீர் சொல்லேன்” என்பது தான்.
அதுமட்டுமின்றி, ஆண்களின் ஒருசில பழக்கவழக்கங்களும் அவர்களுக்கு தொப்பை வருவதற்கு முக்கிய காரணமாக விளங்குகின்றன. சரி, பெண்களுக்கு ஏன் வருவதில்லை என்று கேட்கலாம். இதற்கு பெண்கள் அதிகமாக இல்லாவிட்டாலும், கொஞ்சமாவது வீட்டு வேலைகளை செய்வதால், அவர்களுக்கு தொப்பை வருவதில்லை. அதற்காக பெண்களுக்கு தொப்பை இல்லை என்றில்லை. ஆனால் ஆண்களுடன் ஒப்பிடுகையில் பெண்கள் குறைவே.
இப்போது ஆண்களுக்கு தொப்பை வருவதற்கான காரணிகள் என்னவென்று பார்ப்போம்.
பீர்
ஆம், பீர் குடித்தால் தொப்பை வரும். பெரும்பாலான ஆண்களுக்கு பீர் விருப்பமான பானமாகும். மேலும் பீர் என்ன தான் ஆரோக்கியமானதாக இருந்தாலும், இதனை அடிக்கடி குடித்தால், கலோரிகள் அதிகம் இருப்பதால், அதனால் தொப்பை வரக்கூடும். எனவே, தொப்பையை குறைக்க வேண்டுமெனில், முதலில் ஆல்கஹால் அதிகம் குடிக்கும் பழக்கத்தைக் கைவிடுங்கள்.
செய்யும் வேலை.
தற்போது ஆண்கள் உட்கார்ந்தவாறே வேலை செய்வதால், உண்ணும் உணவுகள் சரியாக செரிமானமாகாமல் கொழுப்புக்களாக மாறி, உடலில் தங்கி தொப்பையை உருவாக்குகின்றன.
உடற்பயிற்சிக்கு நேரம் இல்லை.
உடல் ஆரோக்கியத்தை பார்த்துக் கொள்ள கூட ஆண்களுக்கு நேரம் கிடைப்பதில்லை. அந்த அளவில் வேலைப்பளு நிறைந்த வாழ்க்கைமுறையை வாழ்ந்து வருகின்றனர். இதனால் அவர்களுக்கு ஓய்வு எடுக்கவே நேரம் இல்லாத போது, உடற்பயிற்சி செய்ய எங்கு நேரம் இருக்கும்.
மன அழுத்தம்.
தற்போது வேலைப்பளு அதிகம் இருப்பதால், பல ஆண்கள் மன அழுத்தத்தினால் கஷ்டப்படுகின்றனர். மன அழுத்தம் அதிகமானால், உடலில் ஹார்மோன் ஏற்றத்தாழ்வுகள் ஏற்பட்டு, உணவுப் பழக்கவழக்கங்களில் மாற்றம் உண்டாகி, அதுவே தொப்பைக்கு வழிவகுக்கிறது.
நொறுக்குத்தீனிகள்.
பெண்கள் மட்டும் தான் எந்நேரமும் நொறுக்குத்தீனிகளை சாப்பிடுவார்கள் என்று நினைக்க வேண்டாம். ஆண்கள் கூட ரகசியமாக நொறுக்குத்தீனிகளை சாப்பிடுவார்கள். இல்லாவிட்டால், ஆண்களுக்கு எப்படி தொப்பை வரும்?
சிப்ஸ், வடை.
பெண்களை விட ஆண்கள் தான் டிவி பார்க்கும் போது எதையேனும் சாப்பிட்டுக் கொண்டே இருப்பார்கள். குறிப்பாக விடுமுறை நாட்களில் வீட்டில் இருந்தால், டிவி பார்க்கும் போது சிப்ஸ், வடை, போண்டா என்று சாப்பிட்டவாறே இருப்பார்கள். ஏன் என்று கேட்டால், இன்று ஒரு நாள் தானே, இதில் என்ன உள்ளது என்று சொல்வார்கள். இப்படியெல்லாம் சாக்குபோக்கு சொன்னால், தொப்பை வராமல் என்ன ஆகுமாம்.
பார்ட்டி
பொதுவாக ஆண்கள் நண்பர்களுடன் பார்ட்டிகளில் அதிகம் பங்கு கொள்வார்கள். மேலும் பார்ட்டி என்றால் அன்று அளவே இல்லாமல் குடிப்பதோடு, நன்கு வயிறு நிறைய அசைவ உணவுகளை உட்கொண்டு மட்டையாகிவிடுவார்கள். இப்படி வாரம் ஒருமுறை பார்ட்டியில் கலந்து கொண்டாலே போதும், தொப்பை பெரிதாவதற்கு.
தூக்கமின்மை.
சில ஆண்கள் வேலை அதிகம் உள்ளது என்று, சரியாக சாப்பிடாமல், தூங்காமல், எந்நேரமும் வேலையின் சிந்தனையிலேயே இருப்பார்கள். இப்படி இருப்பதாலும், தொப்பை ஏற்படுகிறது.
இனிப்பான உணவுகள்.
ஆண்களுக்கு இனிப்பு பொருட்களின் மீது ஆசை அதிகம் இருக்கும். அதிலும் ரவா லட்டு, அல்வா, ஜாங்கிரி, மைசூர் பாகு என்றால் அளவில்லாமல் சாப்பிடுவார்கள். இப்படி சர்க்கரை நிறைந்த உணவுகளை அதிகம் சாப்பிடுவதும் தொப்பைக்கு காரணமாக உள்ளது.





0