Showing posts with label சினிமா. Show all posts
Showing posts with label சினிமா. Show all posts

Tuesday, July 21, 2015

சர்வதேச சைக்கிள் ஓட்டப் போட்டியில் பதக்கம் வென்றார் ஆர்யா

சர்வதேச சைக்கிள் ஓட்டப் போட்டியில் பதக்கம் வென்றார் ஆர்யா

ஆர்யா சினிமாவில் ஓய்வின்றி வலம் வந்தாலும் சைக்கிள் ஓட்டுவதில் அதிக ஆர்வம் கொண்டவர்.
கடந்த ஒருவருடமாக சைக்கிள் ஓட்டும் பயிற்சியை தீவிரமாக செய்துவந்த ‘வாடேர்ன் ருன்டன் ரேஸ்’ என்ற பெயரில் ஸ்வீடன் நாட்டில் மோட்டலா என்ற ஊரில் நடந்து வரும் போட்டியில் ஆர்யா கலந்துகொண்டார்.
அபாயகரமான வளைவுகள், ஏரிகள், குளங்கள், மலைகள், சீரற்ற எதிர்காற்று என பல்வேறு சவால்களை கடந்து 300 கிலோ மீட்டர் பந்தய தூரத்தை 15 மணி நேரத்திற்குள் முடித்தாக வேண்டும்.
இந்த பந்தயத்தில் கலந்துகொண்ட ஆர்யா, வெற்றிகரமாக 300 கி.மீ. தூரத்தை கடந்து பரிசு வென்றுள்ளார்.
இதுகுறிந்து ஆர்யா கூறும்போது, வாடேர்ன் ருன்டன் ரேஸில் பதக்கம் வென்றுவிட்டேன். என் கனவை நனவாக்கிய முருகப்பா குரூப்ஸ் டிஐ சைக்கிள், அருண் அழகப்பனுக்கு கோடி நன்றிகள். நான் இந்த பந்தயத்தில் வெற்றி பெறவேண்டும் என வேண்டிக்கொண்ட அத்தனை உள்ளங்களுக்கும் நன்றி என்று கூறியுள்ளார்.
இந்த பந்தயத்தில் கலந்துகொள்வதற்காக கடந்த 8 மாதங்களாக ஆர்யா தீவிர பயிற்சி மேற்கொண்டு வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
0

மீண்டும் சிங்கத்தில் களமிறங்கும் சூர்யா

மீண்டும் சிங்கத்தில் களமிறங்கும் சூர்யா

சூர்யா தொடர் தோல்விகளால் கொஞ்சம் தன் திரைப்பயணத்தில் தடுமாறியுள்ளார்.
இந்நிலையில் தன் அடுத்த படத்தை எப்படியாவது வெற்றியாக்க வேண்டும் எண்ணத்தில் வெற்றிப்பட இயக்குனர் ஹரியுடன் இணைந்துள்ளார்.
சிங்கம்-3 படத்தில் இயக்குனர் ஹரியுடன் இணையவுள்ளார் இப்படத்தில் அனுஷ்காவுடன், ஸ்ருதிஹாசனும் இணையவுள்ளார்.
கடந்த இரண்டு பாகங்களுக்கும் தேவிஸ்ரீ பிரசாத் இசையமைத்திருந்தாலும் இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கவுள்ளார்.
0

இஞ்சி இடுப்பழகிக்காக 20 கிலோ ஏற்றி இறக்கிய அனுஷ்கா!

இஞ்சி இடுப்பழகிக்காக 20 கிலோ ஏற்றி இறக்கிய அனுஷ்கா!

இஞ்சி இடுப்பழகி படத்திற்காக 20 கிலோ எடையை ஏற்றி இறக்கியுள்ளார் அனுஷ்கா.
பாகுபலி படத்தைத் தொடர்ந்து அனுஷ்காவின் பட வரிசை அதிகரித்து வருகிறது.
அவரது அடுத்த படம் ஆர்யா கதாநாயகனாக நடிக்கும் ‘இஞ்சி இடுப்பழகி’.
இதன் படப்பிடிப்பு முற்றிலும் முடிந்ததைத் தொடர்ந்து திரைப்படத்தின் இறுதிக் கட்ட பணிகள் நடந்து வருகின்றன.
இஞ்சி இடுப்பழகி’ படத்தின் கதையே எடைக்குறைப்பு பற்றியதுதான்.
இந்தப் படத்தில் அனுஷ்கா இரண்டு தோற்றங்களில் வருகிறார். இதற்காக அனுஷ்கா 20 கிலோ எடை கூடி, பின்னர் ஆர்யா கொடுத்த சில டிப்ஸ் மூலம் எடையை மீண்டும் குறைத்து வருகிறாராம்.
குண்டான அனுஷ்காவைப் பார்த்த பலரும், அனுஷ்காவுக்கு அக்காவா நீங்க என்று கேட்டார்களாம்.
ஆர்யா இந்தப் படத்தில் ஒரு உடற்பயிற்சி நிபுணராகத் தோன்றுகிறார். சமீபத்தில் ஸ்வீடன் நாட்டில் ஆர்யா பங்கேற்று வெற்றிபெற்ற சர்வதேச சைக்கிள் போட்டி பற்றிய காட்சிகளும் இதில் சேர்க்கப்பட்டுள்ளனவாம்
0

சாதனை படைக்கும் விஜய்யின் புலி திரைப்பட டீஸர் (VIDEO)

சாதனை படைக்கும் விஜய்யின் புலி திரைப்பட டீஸர் (VIDEO)

விஜய்யின் புலி படத்தின் டீஸர் புதிய வரலாறு படைத்து வருகின்றது. அவர் நடித்த படங்களில் புலி டீஸருக்குதான் ரசிகர்கள் பெரும் வரவேற்பை அளித்துள்ளனர்.
புலி டீஸர் வெளியான அன்றே 10 இலட்சத்துக்கும் அதிகமானவர்கள் டீஸரை பார்த்தனர். இரண்டு நாளில் இந்த எண்ணிக்கை கொஞ்சமும் குறையாமல் 20 இலட்சங்களை தாண்டியுள்ளது. இந்த எண்ணிக்கை தற்பொழுது 27 இலட்சத்தை தாண்டியுள்ளது.
எனவே இந்தத் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரு வரவேற்பைப் பெறும் என எதிர்பார்க்கப்படுகின்றது.


puli trailer


      
0

மருமகன் ஜி.வியின் இசையில் முதல் முறையாக பாடும் ஏ.ஆர்.ரஹ்மான்

மருமகன் ஜி.வியின் இசையில் முதல் முறையாக பாடும் ஏ.ஆர்.ரஹ்மான்

அட்லி இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ் இசையில் உருவாகும் விஜயின் 59 படத்தில் ஒஸ்கார் நாயகன் ஏ.ஆர்.ரஹ்மான் அறிமுகப்பாடலைப் பாடப்போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
தலைவா’ படத்தை தொடர்ந்து விஜய் படத்திற்கு மீண்டும் இசையமைக்கிறார் ஜி.வி.பிரகாஷ், இது இவரின் 50வது படமாகும்.
எனவே இசையில் பட்டையை கிளப்பவேண்டும் என்ற முடிவோடு சிரத்தையெடுத்து இசையமைத்து வருகிறாராம் ஜி.வி.பிரகாஷ்.
கலைப்புலி தாணு தயாரிக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு ஜூலை முதலாம் திகதி தொடங்க உள்ளது. படம் தொடங்கும் முன்பே பாடல்களை பதிவு செய்ய ஆரம்பித்து விட்டார் ஜி.வி.பிரகாஷ்.
இந்தப்படத்திற்காக தேனிசை தென்றல் தேவா ஒரு பாடலை பாட அதை பதிவு செய்தார் ஜி.வி.பிரகாஷ். இந்நிலையில் அறிமுகப் பாடலை ஒஸ்கார் நாயகன் ஏ.ஆர்.ரகுமானை பாட வைக்க இருப்பதாக செய்திகள் வந்துள்ளன. ஜி.வி.பிரகாஷ் விருப்பத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் சம்மதித்து விட்டதாகவும் கூறப்படுகிறது.
‘எல்லாப்புகழும் இறைவன் ஒருவனுக்கே’ என்று அழகிய தமிழ் மகன் படத்தில் அசத்தலாக அறிமுகப்பாடலை விஜய்க்காக பாடினார் ஏ.ஆர்.ரஹ்மான், தற்போது 24 என்ற சூர்யா படத்திற்கு மட்டும் தான் தமிழில் இசையமைத்து வருகின்றார்.
விஜய் பொலிஸ் அதிகாரியாக நடிக்கவிருக்கும் இப்படத்தில், சமந்தா, எமிஜாக்ஸன், ராதிகா உள்ளிட்ட பலர் நடிக்கவிருக்கிறார்கள். இப்படத்தில் விஜய்யின் குழந்தையாக நடிகை மீனாவின் மகள் நைனிகா அறிமுகமாகிறார். இதன் படப்பிடிப்பு வரும் ஜூலை முதலாம் திகதி சென்னையில் தொடங்குகிறது.
0

விஜய்யுடன் நடிக்க மறுத்த சத்யராஜ்

விஜய்யுடன் நடிக்க மறுத்த சத்யராஜ்

அட்லீ படத்தில் விஜய்க்கு வில்லனாக நடிக்க இயக்குனர் பாரதிராஜா மற்றும் சத்யராஜ் இருவரையும் அணுகியபோது மறுத்துவிட்டார்கள்.
விஜய், சமந்தா, ஏமி ஜெக்சன், ராதிகா, இயக்குனர் மகேந்திரன் உள்ளிட்ட பலர் நடித்து வரும் படத்தை அட்லீ இயக்கி வருகிறார். ஜி.வி.பிரகாஷ் இசையமைத்து வரும் இப்படத்தை தாணு தயாரித்து வருகிறார்.
இப்படத்தின் படப்பிடிப்பு சென்னையில் நடைபெற்று வருகிறது. விஜய் படத்தில் தன்னுடைய முதற்கட்ட படப்பிடிப்பு முடிந்ததாக சமீபத்தில் ராதிகா அறிவித்திருக்கிறார்.
முதலில் விஜய்க்கு வில்லனாக எதாவது புதிய நடிகர் ஒருவர் நடித்தால் நன்றாக இருக்கும் என்று முடிவு செய்திருக்கிறது படக்குழு.
இதற்காக இயக்குனர் பாரதிராஜாவை முதலில் அணுகி இருக்கிறார்கள். “என்னது வில்லனா? மணிரத்னம் படம், சுசீந்திரன் படம் வித்தியாசமான வேடங்கள் என்பதால் நடித்தேன். விஜய்க்கு வில்லன் எல்லாம் வாய்ப்பே இல்லை” என்று பாரதிராஜா மறுத்துவிட்டார்.
பாரதிராஜாவைத் தொடர்ந்து சத்யராஜை அணுகி இருக்கிறார்கள். அவரோ “‘நண்பன்’ படத்தில் விஜய்யோடு வித்தியாசமான பாத்திரத்தில் நடித்தேன். ரஜினிக்கு வில்லன் என்று கேட்டபோதே மறுத்துவிட்டேன். வில்லன் எல்லாம் வேண்டாம்” என்று தெரிவித்திருக்கிறார்.
பாரதிராஜா மற்றும் சத்யராஜ் இருவரும் மறுத்தவுடன், இயக்குநர் மகேந்திரனை வில்லனாக நடிக்க ஒப்பந்தம் செய்திருக்கிறார்கள்.

0