Wednesday, July 22, 2015

இந்தியாவை வென்றதில் ஆச்சரியம் இல்லை: ஸ்டீரிக்





வங்காளதேச அணியின் பந்து வீச்சு பயிற்சியாளர் ஹீத் ஸ்டீரிக் கூறியதாவது:- 

முதல் இரு ஆட்டங்களில் இந்திய அணியை நாங்கள் தோற்கடித்தது ஒன்றும் ஆச்சரியம் அளிக்கவில்லை. ஏனெனில் உலக கோப்பையில் இருந்து வித்தியாசமான வங்காளதேச அணியை பார்த்து வருகிறோம். அவர்களுக்கு நிச்சயமாக நம்பிக்கை உண்டு. மேலும் தொடர்ந்து வெற்றிகளை குவிக்க முடியும் என்று இப்போது நம்புகிறார்கள். 

இந்தியாவை காட்டிலும் வங்காளதேச அணி தனது வியூகம், திட்டங்களை இங்குள்ள சூழலுக்கு ஏற்ப துல்லியமாக செயல்படுத்தியது. வங்காளதேசத்தை பொறுத்தவரை இந்திய அணியை வீழ்த்தியது மிகப்பெரிய விஷயம். இதன் மூலம் உலக கிரிக்கெட் அரங்கிற்கு ஒரு செய்தியை (நாங்களும் பலமான அணி என்பதை) தெரியப்படுத்தி இருக்கிறார்கள். 

இதில் எல்லா பெருமையும் வங்காளதேச வீரர்களுக்குத்தான் போய் சேர வேண்டும். நெருக்கடியமான கட்டத்திலும், அர்ப்பணிப்புடன் சிறப்பாக செயல்படுகிறார்கள். தோல்வியால் இந்திய வீரர்கள் மிகுந்த ஏமாற்றத்தில் இருப்பார்கள். அந்த அணியில் சிறந்த வீரர்கள் இருக்கிறார்கள். சரிவில் இருந்து கடினமாக முயற்சித்து மீளுவார்கள். 

இவ்வாறு ஹீத் ஸ்டீரிக் கூறினார்.

No comments:

Post a Comment