முல்லைத் தீவு மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களில் பாலியல் துஸ்பிரயோகத்திற்கு உள்ளாகும் சிறுவர்களை பாதுகாப்பு இல்லங்களுக்கு அனுப்பி வைக்க தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை தீர்மானித்துள்ளது .
மனோ நிலை பாதிக்கப்பட்ட சிறுவர்களை மீண்டும் வழமை நிலைமைக்கு கொண்டு வருவதற்கு மூன்று மாத காலம் அவர்களுக்கான ஆலோசனைகள் வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அதிகார சபையின் தலைவர் நடாசா பாலேந்திரன் தெரிவித்துள்ளார்.
இந்த வேலைத்திட்டத்தினை சுகாதார அமைச்சு மற்றும் தேசிய சிறுவர் பாதுகாப்பு சபை ஆகியன ஒன்றினைந்து முன்னெடுக்கப்பட்டுள்ளது .
குறித்த பாதுகாப்பு இல்லங்களை அமைப்பதற்கு அரச விடுதிகளை எதிர்பார்ப்பதாகவும் சுட்டிக்காட்டப்படுள்ளது .
No comments:
Post a Comment