பாகிஸ்தானுடனான 2வது ஒருநாள் போட்டியில் இலங்கை அணி இரண்டு விக்கெட்டுக்களால் வெற்றியீட்டியுள்ளது.
பல்லேகல மைதானத்தில் இடம்பெற்ற இந்தப் போட்டியில் முன்னதாக நாணய சுழற்சியில் வென்று முதலில் துடுப்பெடுத்தாடிய பாகிஸ்தான் அணி 50 ஓவர்கள் நிறைவில் 8 விக்கெட் இழப்பிற்கு 287 ஓட்டங்களைப் பெற்றது.
இதனையடுத்து 288 என்ற வெற்றி இலக்குடன் பதிலுக்கு துடுப்பெடுத்தாடியது இலங்கை அணி.
குஷல் பெரேராவின் அபார ஆட்டத்தால் அந்த அணி (68 ஓட்டங்கள்) 48.1 ஓவர்களில் 8 விக்கெட்டுக்களை இழந்து 288 ஓட்டங்களைப் பெற்று வெற்றியைத் தனதாக்கியது.
No comments:
Post a Comment