Wednesday, July 22, 2015

அழுதாலும் தீராது என் சோகம்

 

நீ வேண்டாமென எத்தனையோ முறை என்னை ஒதுக்கிவிட்டாய் ...!

நீ இருக்கும் இதயம் என நினைக்காமல்
நோகடித்தாய்...!
ஆனாலும் கரையை தேடி முத்தமிடும்
அலையை போல் உன்னை தேடினேன்...!
என் தேடலில் உண்மையான அன்பு பாசம்
அக்கறை அனைத்தும் இருந்தது...!
நீ பணத்தை காட்டி பழகியிருந்தால் நான்
அப்போதே உன்னை விட்டு விலகியிருப்பேன் !
ஆனால்
பாசத்தை காட்டியல்லவா என்னை ஏமாற்றிவிட்டாய




அழுதாலும் தீராது என் சோகம்
என்னை அழ வைக்கும்
உன் நினைவுகள்
இருக்கும் வரையில்...!


உன் புன்னகையில்
வாழ்வது வரமென்றால்
உனக்கான கண்ணீரில்
வாழ்வது எப்படி சாபமாகும் ?
உனக்காக மட்டுமென
ஆகிப்போன என் வாழ்வில் -என்
சாமி மட்டுமல்ல
சாத்தானும் நீ தான் .............



உனக்காகக் காத்திருப்பதில்
சுகம் தான் எனக்கு -----ஆனால்
நான் காத்திருப்பது
உனக்காகத்தான் எனத்
தெரியுமா உனக்கு ..........

முரண்பட்டுப் போனேன் நான்
உன் ஒருவனிடம் மட்டும்
என் அத்தனை தேவையும் நீ தான்
என் அத்தனை தேவைஇன்மையும் நீ தான்
என எப்படி ஆனாய் நீ .....?


துடித்துப் போகிறேன்
யாருக்கும் உன்னை
விட்டுக் கொடுக்க முடியாமல் ...............

தவித்துப் போகிறேன்
உன்னை என்னுடன்
தக்கவைத்துக் கொள்ள முடியாமல் ..................

No comments:

Post a Comment