Showing posts with label வணிகம். Show all posts
Showing posts with label வணிகம். Show all posts

Wednesday, July 22, 2015

தங்க ஆபரணங்களின் விலை குறையும் சாத்தியம்

தங்க ஆபரணங்களின் விலை குறையும் சாத்தியம்

அமெரிக்கப் பெடரல் வங்கியின் வட்டி உயர்வு குறித்த அறிகுறிகள் தெரியப்படுவதால், சர்வேதச சந்தையில் இன்று தங்கம் மற்றும் பிளாட்டினம் அதிகளவில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
வாரத்தின் முதல் நாள் வர்த்தகத்திலேயே தங்கம் விலை சுமார் 5 வருட சரிவை பதிவு செய்து தங்க முதலீட்டாளர்களை அதிர்ச்சிக்குள்ளாகியது.
திங்கட்கிழமை நாணய சந்தையில் வர்த்தகம் ஆரம்பித்து சில நிமிடங்களில் தங்கம் விலை சுமார் 2 சதவீதம் வரை சரிந்துள்ளது. தங்கத்தைப் போலப் பிளாட்டினம் மீதான விற்பனையும் அதிகரித்துள்ளது.
இன்று காலை ஷங்காய் கோல்டு எக்ஸ்சேஞ் சந்தையில் 900,000 லாட் தங்கம் விற்பனை செய்யப்பட்டுள்ளது. வெள்ளிக்கிழமை வர்த்தகத்தில் இதன் அளவு 27,000 ஆக இருந்தது.
சர்வதேச சந்தையில் தங்கம் விலை 2.4 சதவீதம் குறைந்து ஒரு அவுன்ஸ் தங்கம் 1,106.90 டொலருக்கு விற்கப்படுகிறது.
இந்நிலையில் பிளாட்டினம் விலை 5 சதவீதம் குறைந்து ஒரு அவுன்ஸ் 942.49 டொலராக உள்ளது.
0

எரிபொருட்களின் விலையில் வீழ்ச்சி ஏற்படலாம் – ஹர்ஷ டி சில்வா

எரிபொருட்களின் விலையில் வீழ்ச்சி ஏற்படலாம் – ஹர்ஷ டி சில்வா

ஈரான் மற்றும் மேற்குலக நாடுகளுக்கு இடையில் ஏற்படுத்திக் கொள்ளப்பட்ட இணக்கப்பாடுகளின் பிரகாரம் உலக சந்தையில் எரிபொருட்களின் விலையில் வீழ்ச்சி ஏற்படலாம் என கொள்கை திட்டமிடல் பிரதியமைச்சர் கலாநிதி ஹர்ஷ டி சில்வா தெரிவிக்கின்றார்.
இதன் காரணமாக அடுத்த வருடத்தின் முதல் காலாண்டில் இலங்கையிலும் எரிபொருட்களின் விலைகளைக் குறைப்பதற்கு இயலும் என தாம் எதிர்ப்பார்ப்பதாக பிரதியமைச்சர் குறிப்பிடுகின்றார்.
ஈரானின் அணுத்திட்டம் தொடர்பில் ஏற்படுத்திக் கொள்ளப்பட்டுள்ள உடன்படிக்கை இலங்கைக்கு பாதிப்பை ஏற்படுத்துமா என்பது குறித்து நியூஸ்பெஸ்ட் வினவியதற்கு பதிலளித்தபோதே பிரதியமைச்சர் ஹர்ஷ டி சில்வா இந்த விடயங்களைக் கூறினார்.
குறிப்பாக 2016 ஆம் ஆண்டின் முதலாவது காலாண்டில் எரிபொருட்களின் விலை 30 வீதத்தால் குறைவடையும் என எதிர்ப்பார்ப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

0

கிரேக்கத்திற்கு ஞாயிறு வரை காலக்கெடு

கிரேக்கத்திற்கு ஞாயிறு வரை காலக்கெடு

நிதி நெருக்கடி பிரச்சனைக்கான புதிய தீர்வுத் திட்டத்தை எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமைக்குள் கிரேக்க அரசு சமர்ப்பிக்க வேண்டும் என ஐரோப்பிய ஒன்றியத் தலைவர்களின் மாநாடு கெடு விதித்துள்ளது.
இந்நிலையில், கிரேக்கக் கடன் பிரச்சினை தொடர்பில் நிலவும் முட்டுக்கட்டைகளை முடிவுக்குக் கொண்டு வரும் புதிய திட்டங்களை கிரேக்க அரசாங்கம் அவசரகதியில் தயார் செய்து வருகிறது.
ஐரோப்பிய ஒன்றியத்தின் 28 உறுப்பு நாடுகளின் தலைவர்களும் எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை பிரஸ்ஸல்ஸில் சந்திக்கவுள்ளனர்.
இது தான் கிரேக்கத்திற்கு வழங்கப்பட்டுள்ள இறுதிக் காலக்கெடு என ஐரோப்பிய ஒன்றிய மாநாட்டின் தலைவர் டொனால்ட் டஸ்க் தெரிவித்துள்ளார்.
0

வருடாந்தம் 80 ஆயிரம் மெற்றிக் தொன் உப்பினை உற்பத்தி செய்த ஆனையிறவு உப்பளம் புனரமைக்கப்படுமா?

வருடாந்தம் 80 ஆயிரம் மெற்றிக் தொன் உப்பினை உற்பத்தி செய்த ஆனையிறவு உப்பளம் புனரமைக்கப்படுமா?

1938 ஆம் ஆண்டு முதல் 1990 ஆம் ஆண்டு வரை இயங்கி வந்த ஆனையிறவு உப்பளம் யுத்தம் காரணமாக செயலிழந்தது.
கடந்த அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்பட்ட வடக்கின் வசந்தம் திட்டத்தின் கீழ் ஆனையிறவு உப்பளத்தின் புனரமைப்புப் பணிகளுக்கு என பாரம்பரிய கைத்தொழில்கள் மற்றும் சிறு கைத்தொழில் அமைச்சராக இருந்த முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிற்கு முன்னாள் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ஸவினால் 100 மில்லியன் ரூபா நிதி வழங்கப்பட்ட போதிலும் இதுவரை புனரமைப்புப் பணிகள் நிறைவு பெறவில்லை.
வருடாந்தம் ஒரு இலட்சம் மெற்றிக் தொன் உப்பை உற்பத்தி செய்யும் நோக்கில் கடந்த வருடம் முன்னெடுக்கப்பட்ட முயற்சி இதுவரை பலனளிக்கவில்லை.
வருடாந்தம் 60 ஆயிரம் தொடக்கம் 80 ஆயிரம் மெற்றிக் தொன் உப்பினை உற்பத்தி செய்த ஆனையிறவு உப்பளம் செயற்படுத்தப்படுமாயின் தொழில் வாய்ப்புக்கள் மாத்திரமல்லாது, உப்பினை ஏற்றுமதி செய்து நாட்டின் வருமானத்தையும் அதிகரிக்க முடியும்.
நாட்டில் பல அபிவிருத்தித் திட்டங்கள் முன்னெடுக்கப்படுகின்ற போதிலும், பல நூற்றுக்கணக்கானவர்களுக்கு வேலைவாய்ப்பினை வழங்கிய பரந்தன் இரசாயனத் தொழிற்சாலையை இயங்கவைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படவில்லை.
யுத்தம் நிறைவுபெற்று நாட்டில் சமாதானம் உருவாகிவிட்டதாகக் கூறப்படுகின்றபோதிலும் யுத்தச் சான்றுகளாக சில இடங்கள் நினைவுகூரப்படுகின்றன.
கிளிநொச்சியின் ஏ9 வீதி புனரமைக்கப்பட்டு சிறந்த முறையில் போக்குவரத்து நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகின்றன.
எனினும், உள்ளூர் வீதிகள் புனரமைக்கப்படவில்லை என மக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

0

சதொச கூட்டுறவு வர்த்தக நிலையத்தில் அத்தியாவசியப் பொருட்களுக்கு தட்டுப்பாடு

சதொச கூட்டுறவு வர்த்தக நிலையத்தில் அத்தியாவசியப் பொருட்களுக்கு தட்டுப்பாடு

சதொச கூட்டுறவு வர்த்தக நிலையத்தில் இன்று அத்தியாவசியப் பொருட்களுக்கான தட்டுப்பாடு நிலவுவதாக எமது செய்தியாளர்கள் தெரிவித்தனர்.
இதனால் நுகர்வோர் பெரும் அசௌகரியங்களை எதிர்நோக்கியுள்ளதாகவும் அவர்கள் சுட்டிக்காட்டினர்.
சதொச கூட்டுறவு வர்த்தக நிலையத்தின் ஊடாக சந்தைக்குத் தேவையான நுகர்வுப் பொருட்களை சாதாரண விலையில் பெற்றுக்கொடுத்து, மக்களுக்கு நிவாரணத்தை வழங்குவதே அரசாங்கத்தின் நோக்கமாகக் காணப்பட்டது.
நாடு முழுவதும் 305 சதொச கூட்டுறவு வர்த்தக நிலையங்களை ஸ்தாபித்து, சந்தையிலுள்ள ஏனைய வர்த்தக நிலையங்களை விடவும் குறைந்த விலையில் பொருட்களை விநியோகிக்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்திருந்தது.
சதொச நிறுவனத்தில் பொருட்களை கொண்டுசெல்வதற்காக கடந்தகாலங்களில் பயன்படுத்தப்பட்ட வாகனங்கள் இன்று தலைமையக வளாகத்தில் நிறுத்திவைக்கப்பட்டிருந்தமையைக் காணமுடிந்தது.
இலங்கை சதொச நிறுவனத்தை நடத்திச்செல்ல முடியா நிலை காணப்படுவதாக வர்த்தக மற்றும் கைத்தொழில் அமைச்சர் ரிசாட் பதியூதின் கடந்த 24 ஆம் திகதி நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பொன்றில் தெரிவித்திருந்தார்.
சதொச நிறுவனம் 10 பில்லியன் ரூபாவை வங்கியொன்றுக்கும், 03 பில்லியனை விநியோகஸ்தருக்கும் செலுத்த வேண்டியுள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார்.

0

கிரீஸ் நாட்டு வங்கிகள் மூடப்பட்டதால் ஆசிய பங்குச் சந்தைகளில் சரிவு

கிரீஸ் நாட்டு வங்கிகள் மூடப்பட்டதால் ஆசிய பங்குச் சந்தைகளில் சரிவு

கிரீஸ் நாட்டில் வங்கிகள் மூடப்பட்டு, பணத்தை வங்கிகளிலிருந்து எடுப்பதற்குக் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டதையடுத்து, ஆசியாவிலும் ஐரோப்பாவிலும் பங்குச் சந்தைகளில் பெரும் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது.
கிரேக்கத்திற்கான அவசர கால நிதியை நீடிக்க முடியாது என்ற ஐரோப்பிய மத்திய வங்கியின் முடிவை தொடர்ந்து கிரீஸ் நாட்டில் வங்கிகள் மூடப்பட்டன.
இன்றைய நாள் ஆரம்பத்தில் பெரும்பாலான ஐரோப்பிய வங்கிகள் கிட்டதட்ட 4% வீழ்ச்சியடநை்து காணப்பட்டது. எனினும் சிறிது நேரம் சிறு முன்னேற்றம் காணப்பட்டது. முன்னதாக, ஆசிய பங்குச் சந்தைகளும் கணிசமாக வீழ்ச்சிகண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
இந்த வாரம் முழுவதும் கிரீஸ் நாட்டில் வங்கிகள் மூடப்பட்டிருக்கும் என்று அந்நாட்டு அரசாங்கம் அறிவித்துள்ளது.
பணம் எடுக்கும் இயந்திரங்களும் இன்று நண்பகல் வரை மூடப்பட்டிருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த இயந்திரங்கள் இயங்க ஆரம்பித்த பிறகும் ஒரு நாளைக்கு 60 யுரோக்கள் மட்டுமே பணம் எடுக்க முடியும் என்ற கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. எனினும் வெளிநாட்டு வங்கி அட்டைகள் வைத்திருப்பவர்களுக்கு இந்த கட்டுப்பாடு கிடையாது.

0