Saturday, July 25, 2015

உங்கள் மொபைலில் அடிக்கடி சிக்னல் கட் ஆகிறதா? நெட்வொர்க் அளவை துல்லியமாக கண்டறிய வழிகள்!




மொபைலில் நாம் பேசிக்கொண்டிருக்கும் போது அடிக்கடி சிக்னல்கள் கட் ஆவது வாடிக்கையாகிவிட்டது. டவர் ஸ்டிரென்த் அளவை நம் மொபைலில் உள்ள சிக்னல் பார் வழியாகவே நாம் பார்த்து தெரிந்து கொள்ள முடியும். என்றாலும், துல்லியமாக நெட்வொர்க் சிக்னல் அளவை கண்டறிய எளிய வழிமுறைகள் உள்ளன. 

பொதுவாக, சிக்னல் பாரில் 4 பார்கள் இருக்கும். சிக்னல் முழுமையாக கிடைத்தால் பார் அனைத்தும் நிரம்பியிருக்கும். சிக்னல் ரொம்ப வீக்காக இருந்தால் பார்கள் ஒவ்வொன்றாக குறைந்து கொண்டிருக்கும். எனினும், இதை மட்டுமே வைத்து சிக்னல் அளவை தெரிந்து கொள்வதை விட எண்களில் துல்லியமாக பார்த்தால் நாம் சிக்னல் வீக்காக இருக்கும் போது கால் செய்து டென்ஷன் ஆவதை தவிர்த்து சிக்னல் கிடைத்த பிறகு கால் செய்யலாம். 

சிக்னலின் அளவு மைனஸில் இருந்தால் குறைவாக இருப்பதாகவும், 0-வில் இருந்தால் நன்றாக இருப்பதாகவும் அர்த்தம். 

துல்லியமாக சிக்னலை கண்டறிய வழிகள்;-

ஆண்ட்ராய்டு போன்களில் சிக்னல் அளவை கண்டறிய Settings பகுதிக்குள் Settings app > About phone > Status > SIM status > Signal Strength வழியாக சென்றால் டெஸிபல் மில்லி வாட்ஸ் (dBm) என்ற அளவீடுகளில் நமக்கு சிக்னல் அளவு கிடைக்கும். அண்மையில், வெளிவந்துள்ள கிட்காட் மற்றும் லாலிபப் வெர்ஷன்களுக்கும் இதே முறையில் தெரிந்து கொள்ளலாம். 


விண்டோஸ் போன்களில் (லூமியாவில் மட்டும்) கண்டறிய ##3282# என்ற எண்களை டயல் செய்தால் அளவுகள் கிடைக்கும். ஐபோனில் சிக்னல் அளவு கண்டறிய Phone app-க்குள் சென்று *3001#12345#* என்பதை டயல் செய்தால் Field Test Mode ஓப்பன் ஆகும். அதில் சிக்னல் ஸ்டிரென்த்-ஐ எண்களில் காண்பிக்கும்.

No comments:

Post a Comment