Saturday, July 25, 2015

ஹஜ் கோட்டா பகிர்வை நடைமுறைப்படுத்த அனுமதி-உயர் நீதிமன்றம் தீர்ப்பு



ஹஜ் கோட்டா பகிர்­வுக்கு எதி­ராக மூன்று ஹஜ் முகவர் நிலைய உரி­மை­யா­ளர்­களால் உயர் நீதி­மன்றில் தாக்கல் செய்­யப்­பட்­டி­ருந்த அடிப்­படை உரி­மை­மீறல் வழக்கில் உயர்­நீ­தி­மன்றம் நேற்று தீர்ப்­பினை வழங்­கி­யது.

ஹஜ் முக­வர்­களின் அடிப்­படை உரி­மைகள் மீறப்­ப­ட­வில்லை எனத் தெரி­வித்த உயர் நீதி­மன்ற பிர­தம நீதி­ய­ரசர் ஸ்ரீபவன் பகி­ரப்­பட்­டுள்ள கோட்­டா­வுக்­கான அனு­ம­தியை வழங்­கினார்.

இத­ன­டிப்­ப­டையில் ஏற்­க­னவே பகி­ரப்­பட்ட முக­வர்­களின் கோட்டா விப­ரப்­பட்­டியல் நேற்றே உட­ன­டி­யாக சவுதி ஹஜ் அமைச்­சுக்கு அனுப்பி வைக்­கப்­பட்­டது.

ஹஜ் கோட்டா உயர் நீதி­மன்ற ஹஜ் வழி­காட்­டல்­க­ளின்­படி பகி­ரப்­ப­ட­வில்­லை­யெ­னவும் இது தமது அடிப்­படை உரி­மை­மீறல் எனவும் காரா, சப்ரா, ட்ரான்ஸ் வர்ல்ட் ஆகிய மூன்று முகவர் நிலை­யங்­களின் உரி­மை­யா­ளர்கள் இவ்­வ­ழக்­கினைத் தாக்கல் செய்­தி­ருந்­தனர்.

முதலாம் முறை­யாக கோட்டா ஹஜ் முக­வர்­க­ளுக்­கி­டையில் பகி­ரப்­பட்­ட­போது உயர் நீதி­மன்ற ஹஜ் வழி­காட்­டல்­களை மீறி கோட்டா பகி­ரப்­பட்­டுள்­ள­தா­கவும் அதனைத் தடை­செய்து மீள பகிர உத்­த­ர­வி­டும்­ப­டியும் உயர்­நீ­தி­மன்றில் வழக்கு தாக்கல் செய்­யப்­பட்­டி­ருந்­தது.

இத­னை­ய­டுத்து ஹஜ் குழு ஹஜ் வழி­காட்­டல்­க­ளின்­படி நேர்­மு­கப்­ப­ரீட்­சையை நடத்தி கோட்­டாவை மீள பகிர ஏற்­பாடு செய்­வ­தாக உயர் நீதி­மன்றில் மனு­வொன்­றினை சமர்ப்­பித்­தது. அதற்கு நீதி­மன்றம் அனு­மதி வழங்­கி­யது.

ஹஜ் குழு இரண்டாம் முறை­யாக நேர்­மு­கப்­ப­ரீட்சை நடத்தி கோட்­டாவை மீளப் பகி­ர்ந்­தது. அந்­தப்­ப­கிர்வும் தமது அடிப்­படை உரி­கைளை மீறி பகி­ரப்­பட்­டுள்­ள­தாக குறிப்­பிட்ட மூன்று முகவர் நிலைய உரி­மை­யா­ளர்கள் மனு­வொன்­றினை நீதி­மன்றில் சமர்ப்­பித்­தி­ருந்­தனர். இம்­ம­னு­வினை விசா­ரித்த நீதி­மன்றம் நேற்று குறிப்­பிட்ட தீர்ப்பினை வழங்கியுள்ளது.

வாதிகளான மூன்று ஹஜ் முகவர்கள் சார்பில் சட்டத்தரணி மனோகர டி சில்வாவும், முஸ்லிம் சமய மற்றும் தபால் அமைச்சின் சார்பில் சட்டத்தரணி ஞான ராஜும் ஆஜராகியிருந்தனர்.

-Vidivelli-

No comments:

Post a Comment