பாணந்துறை உள்ளிட்ட பிரதேசங்கள் சிலவற்றில் இன்று (24) காலை 8 மணியிலிருந்து பத்து மணித்தியால நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்பு சபை அறிவித்துள்ளது.
களுகங்கை நீர்ப்பாசனத் திட்டத்தில் முன்னெடுக்கப்படவுள்ள திருத்தவேலை காரணமாகவே நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது.
இதன் பிரகாரம் பாணந்துறை, கிரண வீதி மற்றும் அதனை அண்மித்த பிரதேசங்களில் இன்று (24) நீர்விநியோகம் தடைப்படும் என தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்பு சபை விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுதவிர எதிர்வரும் 28 ஆம் திகதி காலை 8 மணிமுதல் ரைகம் மற்றும் அதனை அண்மித்த பிரதேசங்களில் நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாகவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment