Saturday, July 25, 2015

அமெரிக்க திரையரங்கில் துப்பாக்கிச் சூடு:துப்பாக்கிதாரி உட்பட மூவர் பலி



அமெரிக்க லூஸியானா மாநிலத்தில் திரையரங்கு ஒன்றில் துப்பாக்கிதாரியொருவர் நடத்திய சூட்டில் குறைந்தது இருவர் பலியானதுடன் பலர் காயமடைந்துள்ளனர். இறுதியில் துப்பாக் கிதாரி தன்னைத் தானே சுட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார்.


வெள்ளையினத்தவரான 58 வயது நபர் ஒருவரே கைத்துப்பாக்கி யொன்றைப் பயன்படுத்தி இந்தத் தாக்குதலை நடத்தியுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். துப்பாக்கிதாரி லபாயெட் எனும் இடத்திலுள்ள கிராண்ட் திரையரங்கில் சுமார் 20 நிமிட நேரம் சூட்டை நடத்தியதாக அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன.

இந்த சம்பவத்தில் காயமடைந்த 7 பேர் அம்புலன்ஸ் வண்டி மூலம் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.துப்பாக்கிச் சூட்டு சம்பவம் இடம்பெற்ற போது அந்தத் திரையரங்கில் சுமார் 100 பேர் இருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

No comments:

Post a Comment