Wednesday, July 22, 2015

வெலிமடை இரட்டைக்கொலை சந்தேகநபர்களை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவு

வெலிமடை இரட்டைக்கொலை சந்தேகநபர்களை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவு

வெலிமடை நகரிலுள்ள உணவகம் ஒன்றினுள் இடம்பெற்ற இரட்டை கொலைச் சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட ஆறு சந்தேகநபர்களையும் விளக்கமறியலில் வைக்குமாறு வெலிமடை நீதவான் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
இந்த சம்பவத்துடன் தொடர்புடைய ஐந்து சந்தேகநபர்கள் சம்பவ தினத்தன்று கைது செய்யப்பட்டதுடன் ஆறாவது  சந்தேகநபர் நேற்று (21) கைது செய்யப்பட்டிருந்தார்.
ஆறு சந்தேகநபர்களும் இன்று (22) வெலிமடை நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டபோது அவர்களை எதிர்வரும் 27 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது
கடந்த 15 ஆம் திகதி வர்த்தக நிலையமொன்றிற்குள் இடம்பெற்ற தாக்குதலில் இருவர் உயிரிழந்தனர்.
வர்த்தக நிலையத்திற்குள் சென்ற இருவர் பலவந்தமாக பணம் கோரிய சந்தர்ப்பத்தில் இந்த கொலைச்சம்பவம் இடம்பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment