Thursday, July 23, 2015

தேர்தல் சட்டமீறல்கள் தொடர்பில் 471 முறைப்பாடுகள் பதிவு

தேர்தல் சட்டமீறல்கள் தொடர்பில்  471 முறைப்பாடுகள் பதிவு

தேர்தல் சட்டமீறல்கள் தொடர்பில் 471 முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக தேர்தல்கள் செயலகம் தெரிவித்துள்ளது.
முறைப்பாடுகளின் அடிப்படையில் 100 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அரச நியமனம் மற்றும் பதவியுயர்வு தொடர்பில் 139 முறைப்பாடுகள் பதிவாகியுள்ளதாக தேர்தல்கள் செயலகத்தின் முறைப்பாட்டு பணியகம் குறிப்பிட்டுள்ளது.
சட்டவிரோத பாதாதைகளை காட்சி படுத்தியமை மற்றும் சுவரொட்டிகளை ஒட்டியமை குறித்து 91 முறைப்பாடுகள் பதிவாகியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
இதேவேளை பொருட்கள் பகிர்ந்தளிக்கப்பட்டமை தொடர்பில் 68 முறைப்பாடுகள் பதிவாகியுள்ளன.
அரச சொத்துக்களைப் பயன்படுத்தியமை குறித்து 62 முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாகவும் தேர்தல்கள் செயலகத்தின் முறைப்பாட்டு பணியகம் சுட்டிக்காட்டியுள்ளது.

No comments:

Post a Comment